பிரித்தானியா நிரந்தர வீசா விண்ணப்பங்கள் தாமதம்

UK-VISAS[1]லண்டன்: இலங்கையில் இருந்து தமது வாழ்ககைத் துணையுடன் நிரந்தரமாக வசிப்பதற்கான நுழைவு அனுமதிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் கால தாமதமாவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நிரந்தரமாக வசிப்பதற்கான வீசா பெறுவதற்கு விண்ணப்பித்தவர்கள் மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு ஆரம்பத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு புதிய வீசா நடைமுறையினை கடந்த ஆண்டு இறுதியில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கொண்டு வந்தது.

அதற்கமைய பிரித்தானியாவில் உள்ள வாழ்க்கைத் துணையுடன் இணைந்து நிரந்தரமாக வசிப்பதற்கான வீசா அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமது விண்ணப்பம் மற்றும் அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பிரித்தானியாவின் Sheffield இல் உள்ள home office இல் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

அத்துடன் விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் நாளில் கடவுச்சீட்டினை மட்டும் சம்ர்ப்பித்தால் போதுமானது எனவும் அறிவிக்கப்பட்டது.

இப்புதிய நடைமுறையின்படி இந்த ஆண்டு ஆரம்பத்தில் விண்ணப்பித்தவர்கள் மூன்று மாதமாகியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

அதேவேளை 90,000 ரூபா மேலதிகமாகச் செலுத்தி பத்து நாட்களுக்குள் முடிவினை பெற விண்ணப்பித்தவர்களும் இதுவரை எந்த முடிவும் கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்துள்ளனர். இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட புதிய நடைமுறையே இந்த கால தாமதத்திற்கு காரணம் என விண்ணப்பதாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s