-
SHM
லாஹூர்: பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக இருந்த மிஸ்பா உல் ஹக் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணியை ஐசிசி தர வரிசையில் நம்பர்-1 டெஸ்ட் அணியாக உயர்த்திய பெருமைக்கு சொந்தக்காரர் இவர். ஓய்வு பெற்ற மிஸ்பா உல் ஹக்கிற்கு வயது 43 நெருங்குகிறது. பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 2001ம் ஆண்டு தனது 25 வயதில் அறிமுகமானார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது டெஸ்ட் உடன் 75 டெஸ்டில் விளையாடி உள்ளார். டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் வென்ற நிலையில் வெற்றியோடு மிஸ்பா உல் ஹக் விடை பெற்றுள்ளார்.
மிஸ்பா உல் ஹக் தனது, 35 வயதிற்குப் பிறகு 4509 ரன்கள் குவித்துள்ளார். கிரகாம் கூச் 4563 ரன்களும், சச்சின் டெண்டுல்கர் 4139 ரன்களும் இந்த வயதில் குவித்துள்ளனர். மற்ற வீரர்கள் யாரும் 4000 ரன்களை அந்த வயதில் கடந்ததில்லை.
இம்ரான் கானுக்கு பிறகு, தலைவர் என்ற வகையில் பாகிஸ்தான் அணியில் புகழ் பெற்ற ஒரே வீரர் மிஸ்பா உல் ஹக். அவரை “மிஸ்டர் கூல்”, “கூல் nகெப்டன்” என அழைக்கப்படுபவர்.
மிஸ்பா உல் ஹக் தலைமையில் பாகிஸ்தான் 57 போட்டிகளில் ஆடி, அதில் 26 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 வருட காலம் தொடர்ந்து டெஸ்ட் அணி கெப்டனாக இருந்தார். பாகிஸ்தானில் இவ்வளவு நீண்ட காலம் கெப்டனாக இருந்தவர் இவர் மட்டுமே. இதன் உச்சமாக இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணிஇ டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி ரேங்கில் முதலிடம் பிடித்து அசத்தியது
மிஸ்பா தலைமையிலான பாகிஸ்தான் அணி, வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை ஈட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் வோ, ரிக்கி பொண்டிங், தென் ஆபிரிக்காவின் கிரஹம் ஸ்மித் போன்றவர்கள் தலைமையில் அந்த நாட்டு அணிகள் வெளிநாடுகளில் வென்றதைவிட மிஸ்பாவின் பாக்கிஸ்தான் அணி வெளிநாடுகளில் வென்ற போட்டிகள் அதிகம்.
Leave a Reply