நெருக்கடிகளை அதிகரித்துக்கொள்ள போகிறதா கிழக்கு மாகாண சபை

treeகடந்த காலத்தில் கிழக்கு மாகாண அமைச்சினால் தொண்டர் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டமையை நாம் யாவரும் அறிவோம். முதலில் இதற்கு நான் கிழக்கு மாகாண அமைச்சிற்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இருந்த போதிலும் இவ் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொண்ட ஊழியர்கள் தற்போது கவலையில் இருப்பதையிட்டு நான் மனம் வருந்துகின்றேன்.

இது வரையிலும் இவ் ஊழியர்களின் நியமனங்கள் கிழக்கு மாகாண அமைச்சினால் நிரந்தரமாக்கப்படவில்லை. இதை கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கூட்டாட்சி நடத்தும் சக கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் இதற்கு பதில் கூற கடமைப்பட்டிருக்கிறார்கள். ஒரு புறம் வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டங்கள் இவ் நல்லாட்சி அரசாங்கள் மற்றும் கிழக்கு மாகாண சபைக்கு எதிராக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இருந்த போதிலும் இவ் நிரந்தர நியமன விடயம் முதலமைச்சர் மற்றும் சக உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும் என்பதற்காக இதை நான் பதிவிடுகின்றேன்.

குறித்த இவ் ஊழியர்கள் குறைந்த மாத வருமானத்தை பெற்று இதுவரை காலமும் அவர்களது மனைவி மக்களை மிக கஷ்டங்களுடன் பராமரித்தவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். இவற்றை கருத்திற்கொண்டு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக இப்பிரச்சனையை நிவர்த்தி செய்ய பொருப்புடையவராயிருக்கிறார். இதை முதலமைச்சர் உட்பட இவ் நியமனங்களை வழங்கிய அனைத்து மாகாண உறுப்பினர்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லையென்றால் அவர்களின் எதிர்கால அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ் ஊழியர்களுக்கு உண்மையான தீர்ப்பை உடன் வழங்கவும் அதே வேளை பொய்யான வாக்குறுதிகளை வழங்க வேண்டாம் என நான் முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

முதலமைச்சர் அவர்கள் எமது கட்சியின் பெயர் பாதிப்படையாதவன்னம், விமர்சனங்களுக்கு உள்வாங்காத அளவு கையாள வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன். ஒரு தனி நபரின் பிரச்சனையாக வேண்டி தவிர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அப கீர்த்தி அவசியமில்லை. எனவே உடனடியாக இப் பிரச்சனைகளை தீர்பதற்கு முதலமைச்சர் அஹமட் நசீர் (ஹாபிஸ்) அவர்கள் நடவடிக்கை எடுப்பார் என நம்புகின்றேன்.

என்றும் மக்களின் எதிரொலியாய் இறைவன் உதவியுடன்

MIM Zarook – JP
பிராந்திய அமைப்பாளர் – மண்முனைப்பற்று
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
காங்கேயனோடை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s