-
AK-79
காத்தான்குடி: காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் 3ம் வகுப்புப் படிக்கும் பாலகன் ஷம்ரி அகமட் இப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ள சம்பவமானது அனைவரையும் கொதித்தெழ வைத்திருக்கின்றது. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (01) இடம்பெற்றிருந்தது.
3ம் வகுப்புப் படிக்கும் இப்பாலகன் இவ்வாறான மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு அப்படி என்னதான காரணமாக இருந்ததோ இந்த ஆசிரியருக்கு எனும் கேள்விகள் எழுந்தவண்ணமிருக்கின்றன.
உண்மையில் சுயநினைவுள்ள ஓர் ஆசானால் இச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. போதை நிலையில் இவ் ஆசான் இருந்திருக்க வேண்டும். அல்லது தன் குடும்பப் பிரச்சினையின் வெறியினை இப்பாலகன் மீது காட்டியிருக்க வேண்டும் என்றே சொல்ல முடியும்.
இவ் ஆசிரியரின் தாக்குதல் காரணமாக 39க்கும் அதிகமான காயத் தடயங்கள் இப்பாலகனின் உடலில் உறைந்திருப்பதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ் ஆசிரியர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட பாலகன் ஷம்ரி அகமட் இற்கு நியாயம் கிடைக்க மீரா பாலிகா தேசிய பாடசாலை உட்பட ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.


Leave a comment