பிராங்க்ஃப்ர்ட்: ஜெர்மனி, பிராங்க்ஃப்ர்ட் விமான நிலையத்தில் ஒரு பெண், பாலூட்டும் தாயா என்று நிரூபிக்க தனது மார்பகங்களை அழுத்தி காட்ட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறினர் என்று அந்த பெண் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அவர் ‘பிரெஸ்ட் பம்ப்'( breast pump) என்ற பாலூட்டும் தாய்மார்கள் மார்பகத்திலிருந்து பாலை எடுக்கும் கருவியை வைத்திருந்தார்.
ஆனால் அவர், அவரது குழந்தை இல்லாமல் தனியாக பயணம் செய்ததால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரை தடுத்தனர். அவர் பாலூட்டும் தாய்தானா என்று நிரூபிக்க தனது மார்பகங்களை அழுத்தி காட்ட வேண்டும் என்று கூறினார்.
ஜெர்மனி போலிசார் இந்தப் பெண்ணை தாய்ப்பால் கொடுக்க முடியுமா என்று நிரூபிக்குமாறு தாங்கள் கேட்டதாகக் கூறப்படுவதை மறுத்தனர். முன்னதாக அவர்கள் இந்தக் குறிப்பான குற்றச்சாட்டுகள் மீது கருத்து தெரிவிக்க மறுத்திருந்தனர். ஆனால் இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தாங்கள் கடைப்பிடிக்கும் வழக்கமான நடைமுறையில் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.