நவீன முறைப்படுத்தப்படும் காத்தான்குடி ஆயுர்வேத வைத்தியசாலை

  • எம்.ரீ. ஹைதர் அலி

ayurvedicகாத்தான்குடி: மஞ்சந்தொடுவாயில் அமைந்திருக்கும் ஆயுர்வேத வைத்தியசாலையினை நவீனத்துவப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருன்றன. அதற்காக கடந்த வருடம் 2016ஆம் ஆண்டு மத்திய சுகாதார அமைச்சினால் 18 கோடி 50 இலட்சம் ரூபா நிதியொதிக்கீடு மேற்கொள்ளப்பட்டு அதற்கான வேலைகள் ஆரம்பிக்க முற்பட்டபொழுது அதனை அமைப்பதற்கான காணி விடயத்தில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, சில வேளைகளில் இத்திட்டம் இல்லாமல் நின்றுவிடுமோ என்ற நிலைமை காணப்பட்டது.

இதனையடுத்து காத்தான்குடி சம்மேளனமும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்களும் இணைந்து சுகாதார அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோருக்கு இவ்வைத்தியசாலையினை அமைப்பதற்கான காணியினை பெற்றுத்தருவோம் என்று எழுத்துமூலம் சமர்பித்திருந்தனர்

ayurvedic

அதன் பிற்பாடு மேற்கொண்ட பாரிய முயற்சியின் காரணமாக முதியோர் இல்லத்திற்கு அருகாமையில் அமைந்திருக்கும் காணி ஒன்றினை பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை உருவாகியது. இக்காணியினை பெற்றுக் கொள்வதற்காக உதவிய முதியோர் இல்லத்திற்கு பொறுப்பான தலைவர், செயலாளர் உட்பட நிருவாகசபை உறுப்பினர்களுக்கும் அத்தோடு, காத்தான்குடி சம்மேளனத்தின் பங்களிப்புடனும் அக்காணியினை பெற்றுக்கொள்ள முடிந்தமைக்கும் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் உற்பட நிருவாக சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவிவிப்பது சாலப்பொருத்தமானதாகும்.

ayurvedic-jpg-hospital

அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் அக்காணியில் வைத்தியசாலை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு, அக்காணியிலுள்ள மண்ணினை பரிசோதிக்கும் வகையில் நிலத்தின் தன்மை, மண்ணின் தன்மை, அடித்தளம் அமைப்பதற்கான நிலையான தன்மை போன்ற பல முன்னாயத்த விடயங்களை அறிவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்த நிலையில் இவ்வைத்தியசாலையினை அமைப்பதற்காக இவ்வாண்டு இரண்டு கோடி ரூபாய் நிதியினை முதற்கட்டமாக மத்திய சுகாதார அமைச்சு நிதி ஒதிக்கீடு செய்துள்ளது.

எனவே இவ்வைத்தியசாலையினை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக ஆயுர்வேத திணைக்கள ஆளுனரும் மற்றும் அமைச்சின் கணக்காளரும் 2017.01.28ஆந்திகதி – சனிக்கிழமை (நேற்று) தளத்திற்கு விஜயம் செய்து அதனது நிலைமைகளை அவதானித்ததோடு, அடையாளப் படுத்தப்பட்ட காணியில் கட்டிட்டத்தினை அமைப்பதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளனர்.

shibly-thowfeek

இச்சந்தர்ப்பத்தில் பிரதி சுகாதார அமைச்சர் கௌரவ. பைசல் காசிம் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்வதோடு, இவ்வைத்தியசாலையினை அமைப்பது தொடர்பான விடயத்தினை எடுத்துரைத்த பொழுது அதற்கான அனைத்து விதமான உதவிகளையும், முன்னெடுப்புக்களையும் அவர் மேற்கொண்டதுடன் இவ்வைத்தியசாலை அமைவதற்கான சகல விதமான அங்கிகாரங்களையும், ஆதரவினையும் பெற்றுத்தந்தார். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாள் ஷிப்லி பாரூக் தெரிவித்தார்.

அந்த வகையில் இவ்வைத்தியசாலை தற்போதுள்ள இடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்படும் பொழுது அதிகமான பொதுமக்கள் தமது வைத்திய சிகிச்சையினை வைத்தியசாலையின் விடுதியில் தங்கியிருந்து சிறந்த சேவையினை பெற்றுக் கொள்ள முடியும். தற்பொழுது ஆங்கில வைத்தியத்தில் இருக்கும் நாட்டம் குறைந்து ஆயுர்வேத வைத்திய சிகிச்சையில் நாட்டம் பெறுகின்ற ஒரு நிலைமை தோன்றியுள்ளது. அதுமட்டுமன்றி வெளிநாட்டினரும் இவ்வைத்தியத்தினூடாக தமது நோய்களுக்கு சுகம் பெறுவதற்காக இலங்கை நாட்டிற்கு வருகைதந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறாக இங்கு அமையப்பெறவிருக்கும் இந்த வைத்தியசாலையினூடாக இப்பிரதேச, மாவட்ட மக்கள் மாத்திரம் மல்லாமல் முழு நாட்டிலுமுள்ள மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. அத்துடன் எதிர்காலத்தில் மேலும் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் மேலும் பல புதிய தொழிநுட்பத்தினூக சிகிச்சையினை வழங்கமுடியும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s