ரஷ்ய போர்க்கப்பல் அத்துமீறினால் பதிலடிக்குத் தயாராக நிறுத்தப்படும் பிரித்தானியாவின் கப்பல்

russiaலண்டன்: ரஷ்யாவுக்கு சொந்தமான விமான தாங்கி போர் கப்பல் மற்றும் ஏனைய கப்பல்கள் பிரித்தானியாவை கடக்கும்போது பிரித்தானியா மிகவும் உன்னிப்பாக அவதானிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பிரித்தானியாவின் போர் கப்பல் மற்றும் மூன்று போர் விமானங்கள் பயன்படுத்தப்படும் என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அட்மிரல் குஸ்தோவ் என்ற ரஷயா விமான தாங்கி போர் கப்பல் உள்ளிட்ட ஏனைய கப்பல்கள் சிரியாவில் இருந்து ரஷ்யாவை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்துள்ளன.ரஷ்யாவின் அட்மிரல் குஸ்தோவ் விமான தாங்கி கப்பல் மற்றும் ஏனைய கப்பல்கள் ஆங்கிலக் கால்வாயை கடந்து செல்லவுள்ளன.

இந்நிலையில் குறித்த கப்பல்கள் பிரித்தானிய கடற்பரப்பை அண்மிக்கும் போது அதற்கு முகம் கொடுக்கும் வகையில் பிரித்தானியா போர்க்கப்பல் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.ஷ்ய போர் கப்பல்கள் அதன் பயணத்தில் பின்தொடர்ந்து வழியனுப்பப்படும் என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் சேர் மைக்கல் பெல்லோன் கருத்து தெரிவிக்கையில், “அட்மிரல் குஸ்தோவ்” ரஷ்யாவுக்கு திரும்பும் வழியில் நாம் அதனை உன்னிப்பாக அவதானிப்போம்.குறித்த கப்பலின் நடவடிக்கைகளின் காரணமாக சிரிய மக்களே பாரிய வேதனைகளை அனுபவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிரியாவில் வான் தாக்குதல்களில் பங்கேற்றுவிட்டே ரஷ்ய விமான தாங்கி கப்பல் தற்போது ரஷ்யாவை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது. “அட்மிரல் குஸ்தோவ்” என்ற குறித்த விமானம் தாங்கி கப்பல் இந்த மாத ஆரம்பத்தில் மத்திய தரைக் கடலில் இருந்து வெளியேறியுள்ளது.அட்மிரல் குஸ்தோவ் ரஷ்ய விமானப்படையிடம் உள்ள ஒரே விமான தாங்கி கப்பலாகும். இதற்கு துணையாக அணு ஆயுத திறன் கொண்ட மூன்று போர் கப்பல்கள் பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s