– ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
அட்டாளைச்சேனை: கட்சியின் செயலாளர் நாயகமான ஹசன் அலிக்கு தேசியப்பட்டிய வழங்குவதில் பாதம் இல்லை என்றும் வழங்குவது சம்பந்தமான வாக்குறுதியினை வழங்குவதிலும் பாதகம் இல்லை என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையான அப்துர் ரவூஃப் ஹக்கீம் கடந்த ஞாயிற்று கிழமை இரவு வசந்தம் தொலைக்காட்சியில் இடம் பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்கு தனது கருத்தினை தெரிவித்திருந்தார்.
அந்த அவகையில் அவர் தெரிவித்த சில கருத்துக்களினால் அம்பாறை மாவட்டத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் அட்டாளைச்சேனைக்கு பல தடவைகள் கட்சியின் தலைமையினால் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படும் என்ற வாக்குறுதியானது வழமை போல் இம் முறையும் மீறப்பட்டு விடும் என்ற பல விமர்சனங்களுக்கு மத்தியில் சமூக வலைத்தளக்களிலும் ஊடகங்களிலும் செய்திகளாக பிரசுரிக்கப்பட்டு வருகின்றமையினை அதிகமாக காணக்கூடியதாக இருக்கின்றது.
அது மட்டுமல்லாமல் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையிடம் மிகவும் நுனுக்கமாக பல தேடல்களுக்கு மத்தியில் நிகழ்ச்சி தொக்குப்பாளர்களினால் தொடர்ந் தேர்ச்சியாக தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையினை அளிக்க முடியாமல் வழமை போல் கட்சியின் தலைமை சொதப்பி விட்டதாக பரவலாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் அட்டாளைசேனைக்கு வாக்குறுதி அளித்தபடி தேசிய பட்டியலினை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஒட்டு மொத்த அட்டாளைச்சேனை பிரதேசத்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் கொந்தளிப்புடன் இருப்பதாகவும் பேசப்படுகின்றது.
மேற்குறித்த விடயத்துடன் சேர்த்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள முஸ்லிம் காங்கிரசின் தலையின் பதில்கள் சமபந்தமாக முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான அட்டாளைச்சேனையினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற மிக முக்கியமான அரசியல்வாதியும், கட்சித் தலைமையின் விசுவாசத்தினை பெற்ற அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சுகாதார அமைச்சருமான நசீரினை தொலை பேசி ஊடாக தொடர்பு கொண்டு வினவிய வேளையில் முஸ்லிம் காங்கிரசின் தலைமையினை எந்த நிலைமையிலும் மதித்து நடக்கின்ற அட்டாலைச்சேனை பிரதேசத்து மாக்களான நாங்கள் அட்டாளைசேனைக்கு கட்சியின் தலைமை தேசிய பட்டியல் வழங்கும் என்ற நம்பிக்கை இன்னும் இருப்பதாக தெரிவித்தார்.
அத்துடன் மேலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட பதிகளை ஓடியோ காணொலியாக எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றியுள்ளோம்.