கௌரவக் கொலை செய்யப்பட்டாரா இளவரசி டயானா..?

princess-diana-and-dodi-last-hours-princess-diana-17083585-611-404[1]லண்டன்: மக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கும் இளவரசி டயானவை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. மென்மையான பேச்சுக்கு சொந்தக்காரர், இளகிய மனம் கொண்டவர், கள்ளம் கபடமற்ற சிரிப்பு, பழகுவதற்கு இனிமையானவர் ஆகிய நற்பண்புகளே டயானாவின் பெயருக்கு அர்த்தம் ஆகும். ஒரு அரச குடும்பத்தின் மருமகளாக இருந்தபோதிலும், அதன் சாயலை ஒருபோதும் வெளிக்காட்டிக்கொண்டது கிடையாது.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவரான இவரை இளவரசர் சார்லஸ் காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால், 2 குழந்தைகளோடு இவர்களது திருமண வாழ்க்கை கசந்துவிட்டதால், சார்லஸ்ஸிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

1997 ஆம் ஆண்டு கார் விபத்தில் டயான உயிரிழந்தார். டயானாவின் மரணத்திற்கு அவரது ரகசிய காதலும், அவரது வயிற்றில் வளர்ந்த கருவும் ஒரு காரணம் என கூறுப்படுகிறது. அரபு நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடியுடன், டயானாவுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நெருக்கம் புதிய சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது.

டோடியின் பழக்கம் ஏற்பட்ட பின்னர் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சேவைகள், தர்ம அறக்கட்டளைகள் நிறுவுதல் என்று சற்று மாறத் துவங்கிய டயானா மக்கள் சேவை புரிதலேதான் தன் தலையாயக் கடமை என்றார். அன்பு, மக்களிடையே நிலவும் சகிப்புத் தன்மையில்லா போக்குகள் பற்றி பொதுப்படையாக பேசத் துவங்கினார். இருவரும் பாய்மரக்கப்பலில் உற்சாகம் பொங்க பயணம் சென்றது செய்தியாளர்களுக்கு பெரும் சுவாரஸ்யத்தை கொடுத்தது.

இருவரும் செல்லுமிடமெல்லாம் கமெராவும், கையுமாய் பத்திரிகைகாரர்கள் அவர்களைத் துரத்தினார்கள். டோடியும், டயானாவும் பிரான்ஸில் தனிமையில் இருக்க ஆசைப்பட, பத்திரிகைகாரர்களால் அதுமுடியாமல் போனது.

princess-diana-and-dodi-last-hours-princess-diana-17083585-611-404[1]

இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

பாரிஸில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ல் ரிட்ஸ் உணவகத்தில் மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுனர் போய்க் கொண்டிருந்தார்கள். விடாமல் அவர்கள் காரைத் துரத்தியது வேறு ஒரு வாகனம். அதில் பத்திரிகைப் புகைப்படக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்பியே ஆக வேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில், பறந்தது, டயானாவின் கார் விபத்துக்குள்ளானது.

டோடியும், கார் ஓட்டுனரும் அந்த இடத்திலேயே மரணமடைய, உயிருடன் இருந்த டயானாவை மட்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அழகான தேவதை போன்றே பார்த்துப் பழகிய டயானாவை, முகமும் எலும்புகளும் சிதைந்த நிலையில் பார்த்த மருத்துவர்கள் கூட அடக்க முடியாமல் கதறி அழுதனர்.

diana

எவ்வளவு முயன்றும் அந்த புன்னகை இளவரசியை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த செய்தி கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்டது. ஃபிரான்ஸின் தடவியல்துறையினருடன், உளவுத்துறையினரும் களத்தில் இறங்கி விபத்து குறித்து நடத்திய புலன் விசாரணையில், ஓட்டுனர் அதிகம் மது அருந்தியிருந்ததாகவும் அதனாலேயே கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதாகவும் கூறி விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

ஆனால், அலன் பவர் என்பவர் டயானாவின் மர்ம மரணம் தொடர்பாக புதிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டார். அதில் விபத்தில் படுகாயம் அடைந்த டயானாவை பாரீசில் உள்ள பிட்டி – சல்பெட்ரியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவரது வயிற்றை ‘எக்ஸ்-ரே’ எடுத்து பார்த்த டாக்டர் எலிசபத் டயான் மற்றும் செவிலிப் பெண் ஒருவர் வயிற்றினுள் 6 – 10 வார கருவினை கண்டதாகவும், இத்தகவல் மருத்துவமனையின் குறிப்பேடுகளில் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரச குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்றவே எம்-16 உளவாளிகளை ஏவி இங்கிலாந்து அரண்மனை டயானாவைக் கவுரவக்கொலை செய்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s