பல்லாயிரக்கணக்கான மக்கள் கதறியழ அப்துல்லாஹ் ஹஸ்ரத்தின் ஜனாஸா நல்லடக்கம்!

jamiul-lafireenகாத்தான்குடி: காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபரும், புறக்கோட்டை ‘சம்மான்கொட்’ பள்ளிவாயலின் ஆயுட்காலத் தலைவரும், காத்தான்குடி மக்களின் கண்ணியத்துக்குரியவராகவும் இருந்த அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்களின் ஜனாஸா, இன்று காத்தான்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காத்தான்குடி 5, ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற ஜனாஸா நல்லடக்க இரங்கல் நிகழ்வுக்கு அகில இலங்கையிலிருந்து, மார்க்க அறிஞர்களும், அரசியல் பிரமுகர்களும் வருகை தந்திருந்தனர்.

மேலும், காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா உறுப்பினர்கள், சம்மேளன உறுப்பினர்கள், பலாஹிகள், ஹாபிழ்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் அன்னாருக்காக இந்நிகழ்வில் தங்களை அர்ப்பணித்திருந்தனர்.

காத்தான்குடி மட்டுமன்றி, இலங்கை முஸ்லிம்களின் நன்மதிப்பையும், கண்ணியத்தையும் பெற்ற அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள், காத்தான்குடி மண்ணுக்கு விதைத்துச்சென்ற பொக்கிஷங்கள் அளப்பரியவை!

jamiul-lafireen

நேற்று மாலை அண்ணவர்களின் மரணச் செய்தி கேட்டதிலிருந்து இந்த நிமிடம் வரைக்கும் பல இதயங்கள் அவரது மண்ணறை, மறுமை வாழ்வுக்காக கண்ணீருடன் பிரார்த்தித்து வருகின்றன.

காத்தான்குடியில் இடம்பெற்ற 1990 பள்ளிவாயல்கள் படுகொலையின் பின்னர், ஊர் ஒன்றிணைந்து கலந்துகொண்ட ஜனாஸா தொழுகையும், நல்லடக்கமும் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களுடையதாகவே அமைகிறது.

21-03-1932 இந்தியாவின் அதிராம் பட்டிணத்தில் பிறந்த அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள், இவ்வாறான ஓர் தினத்தில் 13-10-1959 இல் ஜாமியத்துல் பலாஹ்வுக்கு பணியாற்ற வந்திருந்தார்கள்.

kattankudy-jamiul-lafireen-funeral-hasarath

கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அன்னார் 12-10-2016 மாலை எம்மைவிட்டும் மறைந்தார். ஹஸ்ரத் நோய்வாய்ப்பட்டதிலிருந்து அன்னாரது குடும்பத்தைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் காத்தான்குடிக்கு வருகை தந்திருந்தனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் சிந்த அப்துல்லாஹ் ஹஸ்ரத்த்தின் மறுமைப் பயணம் காத்தான்குடி மண்ணிலிருந்து ஆரம்பமாகிறது.

அல்லாஹ் அன்னாருக்கு அதி உயர் சுவர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்கிவைப்பானாக!

அன்னாரது மறைவில் துயறுரும் அனைத்து இதயங்களோடும் ‘யுவர்காத்தான்குடி’ பங்கேற்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s