பெரிய ஹஸ்ரத்

hasarath abdullah falahஅந்த
நூர்
நூர்ந்து போனதைப் பர்த்து
நொந்து அழுகிறது மனசு.

ஏனோ தெரியவில்லை.
சஹாபாக்கள் பற்றி
சரித்திரம் படிக்கும்
சந்தர்ப்பங்களிலெல்லாம்
அந்த புனிதர்களாய்
இந்த முகமே
என் மனதின்
இமேஜ் கலறியில் வரும்.

காத்தான் குடி
கலவரங்களால்
காயப் பட்ட போதெல்லாம்
இந்தக்
காயல் பட்டணம்தான்
ஓயாமல் உழைத்தது.

துப்பாக்கி சீறிய
சிப்பாய்கள் கூட்டம்
தங்களின்
ஜுப்பாவை கண்டவுடன்
அப்பாவிப் பிள்ளையாய்
அடங்கிய வரலாறு
அடி மனசில் இன்னும் இருக்கு.

நீங்கள்
நடந்து போகையில்
கடந்து போக மனமின்றி
கனக்கப் பேர் காத்திருப்பார்
உங்கள் முன்னால்
ஊரில் எவரும்
உரத்துப் பேசமாட்டார்.

நீங்கள்
நீரூற்றிய
பலாஹ்
பலாவாகி
பலகாலமாய்
படர்ந்து நிற்கிறது.
அதில்
பழகிய
பலாஹி-பாலாகி
பரந்து ஓடுகிறது.

எல்லா நன்மைகளுக்கும்
இரு உலக வாழ்விலும்
இறைவன்
ஏற்றத்தை தருவானாக.

– நிஷவ்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s