மட்டக்களப்பிற்கு வரும் மகிந்தவுக்கு கைகொடுக்க இருப்பவர்கள் யாவர்?

mahindaமட்டகளப்பு: கூட்டு எதிர் கட்சியின் அடிமட்ட தயார்ப்படுத்தல்கள் மும்முரமாக இடம்பெறுகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய் கிழமை மட்டகளப்பிற்கு வருகிறார். கூட்டு எதிர் கட்சியின் முக்கிய செயற்பாட்டளர்கள் பலரும் இதன் போது கலந்துக் கொண்டுள்ளனர்.

கிழக்கில் வாழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடும் நோக்கில் மட்டகளப்பு வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , விகாரை ஒன்றில் இடம்பெற உள்ள விஷேட நிகழ்வொன்றிலும் கலந்துக் கொள்ளவுள்ளார். பின்னர் அப்பிரதேச மக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

கூட்டு எதிர் கட்சியின் முற்போக்கு முஸ்லிம் அமைப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் ஆரம்பித்து வைத்த நிலையில் , கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இழந்த முஸ்லிம் மக்களின் ஆதரவை மீண்டும் அடையவதற்கான நகர்வுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

நாளை மட்டு வரும் மகிந்தவுக்கு அவரது விசுவாச தமிழ், முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் வழமையைவிடவும் நன்கு கவனிக்க உள்ளதாகவும் “வாரி வழங்கிய” வள்ளளுக்கு தங்களது நன்றிக்கடனை வழங்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s