விளையாட்டு மைதானத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு உடந்தையாக இருந்த இரு உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதி மன்றில் வழக்கு தாக்கல்

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

trashமட்டக்களப்பு: மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தில் நேற்று 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக இரு உணவகங்களின் கழிவுகள் (குப்பைகள்) அடங்கிய 20க்கும் மேற்பட்ட பைகள் இனம் தெரியாதோரினால் வீசப்பட்டுள்ளது. இது தொடர்பில் அப்பகுதியிலுள்ள பொது மக்கள் 22-08-2016-இன்று திங்கட்கிழமை காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்ததையெடுத்து அங்கு விஜயம் செய்த காத்தான்குடி பொலிஸ் நிலைய சூழல்,சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.செல்வராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினரும்,பொது சுகாதார பரிசோதகர்களும்

இணைந்து ஆராய்ந்து மேற்படி குப்பைகளை கொட்டுவதற்கு கொப்பைகளை (கழிவுகளை) வழங்கிய புதிய காத்தான்குடி பதுறியா வீதியிலுள்ள இரு ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு எதிராக பொது இடத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகம் காத்தான்குடி பொலிஸ் நிலைய சூழல்,சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.செல்வராஜா தெரிவித்தார்.

trash

அத்தோடு இரு ஹோட்டல்களிலும் இருந்து குப்பைகளை எடுத்துக்கொண்டு மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தில் குப்பைகளை கொட்டிய நபரை பொலிஸார் தேடி வருவதோடு உடனடியாக குறித்த கழிவுகளை விளையாட்டு மைதானத்தில் இருந்து அகற்றுவதற்கும் மட்டக்களப்பு மாநகர சபையின் உதவியை பெற்று பொலிஸாரும், பொது சுகாதார பரிசோதகர்களும் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s