நாமல் ராஜபக்ஷவுடன் கரிபியன் தீவுக்கு சென்ற நடன மங்கை!

danceகொழும்பு: பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டியை நடாத்தும் உத்தியோகபூர்வ நாட்டை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக கேரிபியன் தீவுகளின் சென்ட் கிட்ஸ் நாட்டுக்கு சென்ற இலங்கை தூதுக்குழுவுடன் நாமல் ராஜபக்ச அழைத்துச் சென்ற இரவு நேர களியாட்ட விடுதியில் நடனமாடும் யுவதியான நாமலி என்ற பெண் குறித்தும் விசாரணை நடத்த பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளின் சென்ட் கிட்ஸ் நாட்டில் நடந்த இந்த நிகழ்வை பிரபல பாடகர் இராஜ் வீரரத்னவின் சகோதரியான அனுஷிகா ரிஷ்னி வீரரத்னவின் ரெட்செரி என்ற நிறுவனம் ஒழுங்கு செய்திருந்தது. அங்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவு நேர களியாட்ட விடுதியில் நடனமாடும் நாமலி என்ற யுவதி சம்பந்தமான தகவல்களை கண்டறிய நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்ற இலங்கையின் ராஜதந்திரிகளுக்குரிய இரவு நேர களியாட்ட விடுதிக்கு நாமல் ராஜபக்ச, நாமலி என்ற இந்த யுவதியை அழைத்துச் சென்றதாக தெரியவந்துள்ளது.தகவல் தெரியவந்துள்ளதை அடுத்து, நாமலின் வர்த்தகங்களுடன் தொடர்புடையவர்கள், அவருடன் தொடர்புகளை வைத்திருந்த யுவதிகள், தொலைக்காட்சி நடிகைகள், களியாட்ட விடுதிகளின் நடன தாரகைகள் குறித்து விஷேட விசாரணை ஒன்றை நடத்த நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

dance

நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான ஹெலோ கோர்ப் பிறைவட் லிமிடட், கவர்ஸ் கோப்ரேட் சேர்விஸ் பிறைவட் லிமிடட், கவர்ஸ் சோலுசன்ஸ், கவர்ஸ் செக்ரட்ரியேட், கவர்ஸ் சிலோன் ஹோல்டிங்ஸ் மற்றும் என், ஆர். அசோசியேட்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஊடாக கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற உதவியதாக கூறப்படும் யுவதிகள் சம்பந்தமாக ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பணச் சலவை தொடர்பாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகளுக்கு அமைய, சம்பந்தப்பட்ட யுவதிகள் வெளிநாடு செல்ல தடைவிதித்து கொழும்பு மேலதிக நீதவான் கடந்த 8 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் நாமல் ராஜபக்சவின் நிறுவனங்களின் பணிப்பாளர்களாக பணியாற்றிய பொலஆராச்சிகே ஒரநெல்லா இரேஷா மற்றும் தில்ருக்ஷி திஸாநாயக்க ஆகிய யுவதிகள் ஏற்கனவே நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s