“தனக்கு மாலை அணிவிக்கக் கூடாது”- சிப்லி

SHIBLYகாத்தான்குடி: அண்மையில் தனக்கு கிடைத்த உலமாகளின் வழிகாட்டலின் பிரகாரமும் அவர்களின் மார்க்க அறிவுறுத்தல்களின் பலனாகவும் இதற்கு பிற்பாடு தான் கலந்து கொள்ளும் எந்த விழாக்களிலும் சரி நிகழ்வுகளிலும் சரி மாலை அணிவித்து தன்னை வரவேற்க கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாரூக் தெரிவித்துள்ளார்.

இந்த வேண்டுகோளினை பொறியியலாளர் ஷிப்லி பாரூக் தனது உத்தியோக பூர்வ முகநூலில் பகிரங்கமாக வெளியிட்டிருப்பது முக்கிய விடயமாகும்.

மேலும் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் தனது வாழ்க்கையினை இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் எம் பெருமானார் றசூலுல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவினை முடியுமானவரை பின்பற்றி செயற்பட்டு வரும் ஒரு இளம் அரசியல்வாதியாக கிழக்கில் காணக்கிடைக்கின்றது.
அது மட்டுமல்லாமல் தான் அவதானித்த அனைத்து நிகழ்வுகளிலும் மாற்று மத சகோதரர்கள் பின்பற்றும் குத்து விளக்கேற்றுதல் மற்றும் அவர்களை சார்ந்த இன்னோரன்ன வரவேற்பு நிகழ்வுகளில் அவர்களுடைய உள்ளங்களை பாதிக்காத வகையில் முடியுமானவரை முற்றிலும் தவிர்ந்து ஹாலால்,ஹராமினை அறிந்து செயற்பட்டு வரும் அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருகின்றார்..

அத்தோடு எவ்வாறு றசூல் (ஸல்) அவர்கள் எமக்கு ஆடை அணிய வேண்டும் என்று காட்டித்தந்தார்களோ அந்த சுன்னாவினை முற்றிலும் பின்பற்றியவராக மிகவும் எழிமையான முறையில் காற் சட்டையினை கரண்டி கால்களுக்கு மேலே அணியும் ஒருவராகவே அவரினை பார்க்க கிடைக்கின்றது.

அந்த வகையிலே பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அரசியலில் தனக்கு மக்கள் தந்துள்ள அதிகாரமானது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அன்றி பங்குகொள்ளும் நிகழ்வுகளிலும், விழாக்களிலும் மாலை அணிவித்து கெளரவிப்பதற்காக அல்ல என்ற கருத்தினை முற்றாக பின் பற்றி நடப்பவராக இருக்கின்றார். அது மட்டுமல்லாமல் மக்கள் எமக்கு தந்துள்ள அரசியல் அதிகாரத்தினை வைத்து நாங்கள் அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக உரிய முறையில் சேவையாற்றுவோமயின் இங்கு மாலை அணிவித்து கெளரவிக்கப்படுவதனை விடவும் அல்லாஹ் மறுமையில் எமக்கு அளிக்கின்ற கெளரவமே முக்கியமனது என்ற கொள்கையில் இருந்து அங்குலமேனும் தான் வழிதவறி விடக்கூடாது என்பதில் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் இருக்கின்றார் என்பதனை அவருடைய வாழ்க்கை செயல்முறையினை அவதானிகின்ற பொழுது தெளிவகும் விடயமாக இருக்கின்றது.

அந்த அடிப்படையிலேயே அல்லாஹ்விற்கு பயந்தவராக றசூல் (ஸல்) அவர்களின் சுன்னாவின் அடிப்படையில் மீசையினை கத்தரித்து, நீண்ட தாடியுடன் உலக ஆசாபாசங்களை முடியுமானவரை உதறி தள்ளி விட்டு மாற்று சகோதரர்கள் பங்கு பற்றும் அரசியல், சமூகம், நிருவாகம் சமபந்தமான நிகழ்வுகள் மற்றும் விழாக்களில் மக்கள் பிரதி நிதியக கலந்து கொண்டு முஸ்லிம்களின் காணிப்பிரச்சனைகள், அடிப்படை உரிமைகள், சம்பந்தமக எதற்கும் அஞ்சாமல் குரல் கொடுக்கின்ற இளம் அரசியல் வாதியாகவும் செயற்பட்டு வருகின்றமையானது

சந்தோசப்படகூடியதும் வரவேற்கத்தக்க விடயமாக பார்க்கும் அதே நேரத்தில் முஸ்லிம் இளைஞர்களுக்கு வளர்ந்து வரும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் எடுத்துக்காட்டக அமைந்துள்லது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

One Response to ““தனக்கு மாலை அணிவிக்கக் கூடாது”- சிப்லி”

  1. Salih Khan Naleemi Says:

    een appa ippadi vakkalathu vankureenga


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s