சுகாதார துறையில் அபிவிருத்தி காணும் காத்தான்குடி தள வைத்தியசாலை

  • M.T. ஹைதர் அலி

DR JABIRகாத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலையில் இரத்த வங்கி பிரிவு, புணர்நிர்மானத்திற்காக 67 இலட்சம் ரூபாவும், வைத்தியர்கள் தங்குமிட விடுதி அமைப்பதற்கு 1 கோடியே 8 இலட்சம் ரூபாவும் எனது வேண்டுகோளிக்கமைவாக மாகாண சுகாதார அமைச்சினால் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டடங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2016.07.02ஆந்திகதி (செவ்வாய்க்கிழமை) காலை 09.00 மணியளவில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் ஜாபிர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் ஹாபிஸ் நஸீர்

அஹமட் அவர்களும், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆகியோரினால் அடிக்கல் நடப்படப்பட்டது.

DR JABIR

இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக் …

இம்மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தின் கீழ் காணப்படுகின்ற ஒரேயொரு வைத்தியசாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையாகும். அவ்வைத்தியசாலையின் பழுக்களை குறைப்பதற்காகவே நாங்கள் இப்படியான அபிவிருத்திகளை மேற்கொண்டு மக்களுக்கு சிறந்த முறையில் சுகாதார சேவையினை வழங்க வேண்டுமென்று நினைக்கின்றோம்.

SWHIBLY NAZEER HAFIZ

அன்மைக்காலமாக இவ்வைத்தியசாலையை பல வழிகளில் அபிவிருத்தி செய்து வருகின்றோம். காத்தான்குடியில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் 400இற்கும் மேல் உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அன்மையில் உளவியல் பிரிவு ஒன்றினை உருவாக்கி அதற்கு இரண்டு வைத்தியர்கள் நியமிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது எனவும் தனதுரையில் தெரிவித்தார்.

காத்தான்குடி தள வைத்தியசாலையை அபிவிருத்தி செய்கின்ற தொடர் முயற்சியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைவாக மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் அவர்களின் ஆதரவுடன் மத்திய அரசினூடாக 33 மில்லியன் நிதி மேலதிக உபகரணங்களை கொள்வனவு செயவதற்குகாக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

KHAMIL JABIR

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கருனாகரன், மாகாண சுகாதார பணிப்பாளர் முருகநத்தன், மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் திருமதி. நவரட்னராஜா மற்றும் காத்தான்குடி தள வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் ஜாபிர், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s