கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் காத்தான்குடி அஷ் ஷுஹதா வீதியினை பூரணப்படுத்தல்

  • M.T. ஹைதர் அலி

suhada rdகாத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள அஷ் ஷுஹதா வீதியானது மக்களினால் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஓர் பிரதான வீதியாகும். இவ்வீதியானது செப்பனிடப்படிருந்தாலும் அதில் ஒரு பகுதி பல வருடகாலமாக பூரணப்படுத்தப்படாமல் இருந்ததன் காரணத்தினால அவ்வீதியானது பள்ளம் படுகுளியுமாக மாறி சேதமடைந்து மழை காலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக அப்பகுதி வாழ் பொதுமக்களும் அவ்வீதியினை பயன்படுத்துகின்றவர்களும் குறிப்பாக மாணவர்கள்,

கற்பிணி தாய்மார்கள் மற்றும் அன்றாடம் தொழில் நடவடிக்கைகளுக்கு செல்பவர்களும் பல்வேறு இடர்களுக்கும், இன்னல்களுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து வருவதாகவும், இவ்வீதியினை மிகவும் விரைவாக பூரணமாக செப்பனிட்டு தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து மக்கள் பங்களிப்புடன் இவ்வீதியினை செப்பனிடுவதற்காக கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் இவ்வீதியானது உள்வாங்கப்பட்டுள்ளது.

suhada rd

இத்திட்டம் அமல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மோற்கொள்ளப்பட்டு வருவதோடு, இத்திட்டத்திற்காக பத்து லட்சம் ரூபாய் நிதியொதிக்கீடு செய்யப்பட்டு கொங்ரீட் வீதி இடப்பட இருக்கின்றது.

shibly niyazee

இவ்வீதியானது சிறந்த முறையில் நீர் தேங்கி நிற்காமல் வடிந்தோடக்கூடிய முறையிலும் சிறந்த தரமுள்ள கொங்ரீட் கலவைகள் இடப்பட்டு இவ்வீதி அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி நகர சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுடன் உரிய இடத்திற்கு களவிஜயமொன்றினை மேற்கொண்டதோடு, இவ்வீதியினுடைய நிலைமைகளை எடுத்துரைத்து, அதற்கான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வழங்கினார்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s