சவுதி கொடை வள்ளல் ஒருவரின் உதவியுடன் மூன்று கோடி ஐம்பது இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட மாஞ்சோலை பள்ளிவாயல் திறப்பு

  • எம்.ரீ.எம். பாரி்ஸ்

mancholai hiluriyyaஓட்டமாவடி: 200 வருட கால வரலாற்றுப் பின்னனியை கொண்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைத்துள்ள மாஞ்சோலைக்கிராம் 1981 ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் மாஞ்சோலை மாதிரிக்கிராமம் என்ற பெயரில் வீட்டுத்திட்டம் உருவாக்கப்பட்டது. நாட்டில் நிலவிய மூன்று தசாப்த கால யுத்ததின் காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்ட இக்கிராம மக்கள் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இக்கிராமத்தை விட்டு வெளியோறிச்செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட சாதகமான சுழ்நிலையின் பின்னர் மீண்டும் குடியோறிய இம்மக்களின் வாழ்விடம் முழுமையாக அழிக்கப்பட்டிருந்தது.

mancholai hiluriyya

இருப்பினும், முற்றிலும் முஸ்லிம்ளைக் கொண்ட இக்கிராமத்தில் தமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான இறை இல்லம் ஒன்று நிறுவப்பட வேண்டிய தேவையிருந்தது.

mosque

இக்கிராம மக்களின் கோரிக்கையினை ஏற்ற இலங்கை ஜமாஅத் அன்சாரில் சுன்னதில் முஹம்மதிய்யா சவூதி அரோபிய்யா நாட்டினைச் சேர்ந்த தமது பெயரினைக் குறிப்பிட விரும்பாத கொடை வள்ளல் ஒருவரின் உதவியுடன் மூன்று கோடி ஐம்பது இலட்சம் ரூபாய் செலவில் பள்ளிவாயல் நிர்மாணிக்கப்பட்டு, மக்களின் பாவனைக்காக இன்று (22.07.2016) ஜூம்ஆ தொழுகையுடன் கையளித்துள்ளது.

mancholai mosque

ஜமாஅத் அன்சாரில் சுன்னதில் முஹம்மதிய்யாவின் இஸ்லாமிய்ய அழைப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், ஜமாஅத் அன்சாரில் சுன்னதில் முஹம்மதிய்யாவின் தலைவர் அபூபக்கர் சித்தீக் மதனி மற்றும் சவூதி நாட்டு முக்கிய பிரதிநிதிகள் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s