ஆறு நோன்பு ஹதீஸ் ஆதாரமற்றதா? கலாநிதி அஹ்மத் அஷ்ரபிற்கான மறுப்பு -02

  • NTJ

ntj asrafஷவ்வால் மாதத்தில் நோற்கப்படும் ஆறு நோன்பு ஹதீஸை கலாநிதி அஹ்மத் அஷ்ரப் பலவீனம் என எழுதியிருந்தார். முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஸஃத் என்ற அறிவிப்பாளர் மனனசக்தி குன்றியவர் என்பதே கலாநிதியின் பிரதான விமர்சனமாக அமையப் பெற்றிருந்தது. ஸஃதின் அறிவிப்பை வலுப்படுத்தும் விதத்தில் அபூதாவுதில் இடம் பெற்ற ஸப்வானின் அறிவிப்பை நாம் எடுத்துக்காட்டினோம். இதற்கு கலாநிதி பதிலொன்றை மீண்டும் வெளியிட்டுள்ளார்.

அவரது பதிலுக்கான மறுப்பை இங்கே வெளியிடுகிறோம்.

கலாநிதியின் விமர்சனம்

ஸஃத் பின் ஸஈத் என்பவருடன் ‘ ஸப்வான் பின் ஸுலைம் ‘ என்பவரை இணைத்து, அறிவிப்பு ஒன்று வந்துள்ளது .(அபூ தாவூத் : 2433 ) இதை அடிப்படையாகக் கொண்டு, சில சகோதரர்கள், ஷவ்வால் நோன்பு ஹதீஸை ஏற்கமுடியும் என்று வாதிடுகின்றனர். ஆனால், ஸஃத் பின் ஸஈத் என்பவருடன் சப்வானை இணைத்தது , அப்துல் அஸீஸ் அத்தராவர்த்தி என்பவரின் தவறாகும் .அத்தராவர்த்தி அவர்களின் மனன சக்தியில் சற்று கோளாறு உள்ளது.அத்தராவர்த்தி வேறு ஒரு சந்தர்ப்பத்தில், சப்வானுடன், ‘சைத் பின் அஸ்லம்’ என்பவரை இணைத்துள்ளார்.(ஷர்ஹ் முஷ்கில் ஆதார் : 2343 )

இதுவும் ஒரு தவறாகும் . இது, அவர் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரை உரிய முறைப்படி மனனமிடவில்லை என்பதை ஊறுதிப்படுத்துகின்றது.

எனவே ஸப்வானைக் இணைத்துக் கூறும் அறிவிப்பை துணை ஆதாரமாகக் கொள்ள முடியாது. தவறை, தவறுடன் இணைத்து ‘சரி’ என்ற தரத்துக்கு உயர்த்த முடியாது

கலாநிதியின் விமர்சனத்திற்கான பதில்

ஷவ்வால் நோன்பு ஹதீஸை அப்துல் அஸீஸ் என்ற அறிவிப்பாளர் மொத்தமாக ஐந்து நபர்களிடத்தில் கூறுகிறார்.

1.ஹுமைதி

இவரிடத்தில் கூறும் போது உமரிடம் ஸப்வானும் ஸஃதும் கேட்டதாக அறிவிக்கிறார். இது முஸ்னதுல் ஹுமைதியில் 385 வது இலக்க ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

مسند الحميدي (1ஃ 371)

385 – حَدَّثَنَا الْحُمَيْدِيُّ قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، وَسَعْدِ بْنِ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ

صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَامَ رَمَضَانَ وَأَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ فَكَأَنَّمَا صَامَ الدَّهْرَ

ntj asraf

2.நுஅய்ம் பின் ஹம்மாத்

இவரிடம் கூறும் போது உமரிடம் ஸப்வானும் ஸஃதும் கேட்டதாக அறிவிக்கிறார். இது சுனனுத் தாரமீயில் 1795 வது

இலக்க ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

سنن الدارمي (2ஃ 1100)

1795 – حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا صَفْوَانُ، وسَعْدُ بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ، ص: عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتَّةً مِنْ شَوَّالٍ، فَذَلِكَ صِيَامُ الدَّهْرِ»

تعليق المحقق إسناده حسن ولكن الحديث صحيح

3.கல்லாத் பின் அஸ்லம்

இவரிடம் கூறும் போது உமரிடம் ஸப்வானும் ஸஃதும் கேட்டதாக அறிவிக்கிறார். இது நஸாயியில் 2876 வது இலக்க ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

السنن الكبرى للنسائي (3ஃ 239)

2876 – أَخْبَرَنَا خَلَّادُ بْنُ أَسْلَمَ، قَالَ الدَّرَاوَرْدِيُّ عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، وَسَعْدِ بْنِ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ صَامَ رَمَضَانَ وَأَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ فَكَأَنَّمَا صَامَ الدَّهْرَ كُلَّهُ

4. இஸ்ஹாக்

இவரிடம் கூறும் போது உமரிடம் ஸப்வானும் ஸஃதும் கேட்டதாக அறிவிக்கிறார். இது இப்னு ஹிப்பானில் 3634 வது இலக்க ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

صحيح ابن حبان – مخرجا (8ஃ 396)

3634 – أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ ஜص:397ஸ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنِي صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، وَسَعْدُ بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ

بْنِ ثَابِتٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ صَامَ رَمَضَانَ، وَأَتْبَعَهُ بِسِتٍّ مِنْ شَوَّالٍ، فَذَلِكَ صَوْمُ الدَّهْرِ

5.அஹ்மத் பின் அப்தஹ்

இவரிடம் கூறும் போது உமரிடம் ஸப்வானும் ஸஃதும் கேட்டதாக அறிவிக்கிறார். இது இப்னு ஹுஸைமாவில் 2114வது இலக்க ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

صحيح ابن خزيمة (3ஃ 297)

2114 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيَّ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمَانَ، وَسَعْدِ بْنِ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ

قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتَّةَ أَيَّامٍ مِنْ شَوَّالٍ، فَكَأَنَّمَا صَامَ الدَّهْرَ

6.நுபைலீ

இவரிடம் கூறும் போது உமரிடம் ஸப்வானும் ஸஃதும் கேட்டதாக அறிவிக்கிறார். இது இப்னு அபூதாவுதில் 2443 வது இலக்க ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

سنن أبي داود (2ஃ 324)

2433 – حدثنا النفيلي، حدثنا عبد العزيز بن محمد، عن صفوان بن سليم، وسعد بن سعيد، عن عمر بن ثابت الأنصاري، عن أبي أيوب، صاحب النبي صلى الله عليه

وسلم، عن النبي صلى الله عليه وسلم قال: «من صام رمضان، ثم أتبعه بست من شوال، فكأنما صام الدهر

__________

حكم الألبانيஸ : صحيح

மேற்குறித்த ஆறு நபர்களிடத்திலும் உமர் என்பவரிடமிருந்து ஸப்வானும் ஸஃதும் கேட்டதாக அறிவித்த அப்துல் அஸீஸ் ஸயீத் பின் மன்ஸுர் என்பவருக்கு இதை அறிவிக்கும் போது உமர் என்பவரிடமிருந்து ஸப்வானும் ஸைத் பின் அஸ்லமும் கேட்டதாக அறிவித்துள்ளார். இது ஷரஹு முஷ்கிலில் ஆதார் எனும் நூலில் 2343 வது இலக்க ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

شرح مشكل الآثار (6ஃ 122)

2343 – كَمَا قَدْ حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنِي صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، وَزَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عُمَرَ بْنِ

ثَابِتٍ، ஜص:123ஸ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ مَنْ صَامَ رَمَضَانَ وَأَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ فَكَأَنَّمَا صَامَ الدَّهْرَ

அப்துல் அஸீஸ் ஸயீத்; என்பவருக்கு அறிவித்த தகவல் மற்ற ஆறு நபர்களுக்கும் அறிவிக்காத மேலதிக தகவலாகவே உள்ளது. அதாவது உமரிடம் ஸப்வான், ஸஃத் ஆகியோர் கேட்டு அறிவித்ததைப் போல் ஸைத் பின் அஸ்லமும் கேட்டு அறிவித்துள்ளார் என்பதையே இதிலிருந்து நாம் புரியலாமே தவிர இதை அப்துல் அஸீஸ் சரியாக மனனமிட்டு சொல்லவில்லை என விளங்குவது தவறாகும். அப்துல் அஸீஸின் அறிவிப்பு ஷவ்வால் நோன்பு உள்ளது என்ற எமது நிலைப்பாட்டைத்தான் உறுதி செய்கிறது. கலாநிதி இந்த விதியை சரியாக அறியவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் கலாநிதியிடம் பின்வரும் கேள்வியொன்றையும் முன்வைக்க விரும்புகிறோம். இமாம் அபூஹாதிம் என்ற ஹதீஸ்கலை வல்லுனர் ஷவ்வால் நோன்பு சம்பந்தப்பட்ட ஹதீஸை சரியான ஹதீஸாக கருதிகிறார். இதை இமாம் இப்னு அப்தில்பர் தனது இஸ்தித்கார் எனும் நூலில் இடம் பெறச் செய்துள்ளார்.

الاستذكار (3ஃ 380)

قَالَ أَبُو حَاتِمٍ الرَّازِيُّ عُمَرُ بْنُ ثَابِتٍ الْأَنْصَارِيُّ سَمِعَ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ رَوَى عَنْهُ الزُّهْرِيُّ وَصَفْوَانُ بْنُ سُلَيْمٍ وَصَالِحُ بْنُ كَيْسَانَ وَمَالِكُ بْنُ أَنَسٍ وَسَعْدٌ وَعَبْدُ رَبِّهِ ابْنَا

سَعِيدٍ وَحَدِيثُ ثَوْبَانَ يُعَضِّدُ حَدِيثَ عُمَرَ بْنِ ثَابِتٍ هَذَا

உமர்; பின் தாபித் அபூஅய்;யூப் அன்ஸாரியிடம் கேட்டுள்ளார். உமரிடமிருந்து ஸுஹ்ரீ,ஸப்வான் ஸாலிஹ்,மாலிக்,ஸயீதின் இரு பிள்ளைகளான ஸஃத் மற்றும் அப்து றப்பிஹ் ஆகியோர் அறிவித்துள்ளனர். உமர் பின் தாபித் அறிவித்த இந்த ஹதீஸை தவ்பானின் செய்தி வலுப்படுத்துகிறது (இஸ்தித்கார் 3:380)

ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசைகளில் ஏற்படும் வடுக்களைக் கண்டுபிடிப்பதில் விற்பன்னராகத் திகழ்ந்த இமாம் அபூஹாதிம் என்ற அறிஞர் ஷவ்வால் நோன்பு சம்பந்தப்பட்ட ஹதீஸை ஸஹீஹான ஹதீஸாகக் கருதுகிறார். அவர் மிகப் பெரும் அறிஞர் என்பதை கலாநிதியும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இப்போது எமது கேள்வி இமாம் அபூஹாதிம் கூறியது சரியா? தவறா? இதை கலாநிதி விபரிக்க வேண்டும் என்பதை இங்கு நினைவூட்டிக் கொள்கிறோம்.

19.07.2016

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s