அல்ஹம்துலில்லாஹ்! குடி மக்கள் ஆதரவுள்ள ஆட்சி அதிகாரத்தை சதிகாரர்களால் அழித்துவிட முடியாது என்பதை துருக்கி மக்கள் நிருபித்துள்ளனர்!

  • M. சில்மி தாஜூதீன்

turkeyஇன்று உலகம் முழுவதும் துருக்கி இரானுவ சதிப்புரட்சி பற்றிய செய்தியே நிறைந்திருக்கிறது, நேற்று நள்ளிரவு நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சதிப்புரட்சி அல்லாஹ்வின் உதவியால் சூரிய உதயத்துக்கு முன்பே முறியடிக்கப்பட்டு விட்டது, உலகில் முஸ்லீம்களுக்கு எதிராகவும், இஸ்லாத்துக்கு எதிராகவும் நடக்கின்ற சதிகளை எதிர்த்து பேசும் துருக்கிய ஜனதிபதி றஜப் தையுப் அர்தூகானையும், அவரது அரசையும் கவிழ்ப்பதற்காக மேற்கு நாடுகளினதும், சில அரபுத் தலைமைகளினதும் நிகழ்ச்சி நிரலாகவே இப்புரட்ச்சி அமைந்துகாணப்பட்டன.

மத்திய கிழக்கில் அன்மையில் ஏற்பட்ட அரபுவசந்தத்திற்கு ஆதரவாகவும், சிரியா மற்றும் காசா மக்களின் நலனுக்காகவும் பலமான ஆதரவு கொடுத்துவரும் அர்துகானை பலவீனப்படுத்தும், அடிமைப்படுத்தும் ஒரு முயற்சியின் தோல்வியாகவோ இந்த ரானுவப்புரட்சியை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

பென்சில்வானியாவிலிருந்து இயங்கும் நயவஞ்சன் பத்ஹூல்லாஹ் கோலான் மூலம் இயக்கிவந்த முப்படைகளின் தளபதிகளினுடைய ஆலோசகராக இருந்த “மஹ்ரம் கூசா” இப்புரட்ச்சியின் நாயகனாக அடையாளம்காணப்பட்டு அவருடன் சேர்ந்து சுமார் 754 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இரானுவத்திலுள்ள ஒரு பிரிவினரை பயன்படுத்தி இப்புரட்ச்சியை நள்ளிரவில் ஆரம்பித்தார். ஆனால் வான்படை, பொலிஸ் ஆகியன இவர்களுடன் ஒத்துழைப்பு வழங்க மறுத்தனர். அதன்பின்னர் 12நிமிட Skype மூலம் நாட்டு மக்களிடம் ஜனாதிபதி உரையாற்றினார். அவ்வுரைக்கு கட்டுப்பட்டு மக்கள் இரவு சாமம் என்றுகூட பார்க்காமல் மில்லியன் கணக்கில் தக்ஸீம் சதுக்கத்திலும், வீதிக்கும் இறங்கினர். 60 மேற்பட்ட மக்கள் ஷஹீதாக்கப்பட்டும் பல நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்டும் இச்சதிப்புரட்ச்சியை முறியடித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

turkey

இச்சதிப்புரட்ச்சி நள்ளிரவில் தொடங்கினாலும் அல்லாஹ்வின் உதவியோடும், மக்களின் ஆதரவோடும், அர்துகானின் திறைமையினாலும் சாமர்த்தியமாக முறியடிக்கப்பட்டமை இஸ்லாத்தின் எதிரிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்து விட்டது. இது உண்மையில் துருக்கியின் வெற்றியல்ல முஸ்லீம் உம்மாவின் வெற்றியாகும். நிச்சயமாக இவ்வெற்றியானது மத்திய கிழக்கில் குறிப்பாக சிரியா, பலஸ்தீனிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதோடு முஸ்லீம் உம்மத்துக்கு புதிய உத்வேகத்தையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது “இன்று இருக்கின்ற துருக்கி நேற்றைய துருக்கியல்ல, நம் நாட்டிலுள்ள அனைத்து துரோகிகளும் துப்பரவு செய்யப்படுவார்கள்.” என்று கூறினார். துருக்கியை ஜரோப்பாவின் நோயாளி என்று கொச்சைப்படுத்திய மேற்கு நாடுகளுக்கு துருக்கி ஜரோப்பாவின் வல்லரசு என்பதனை நிரூபித்து காட்டியுள்ளார். உன்மையில் றஜப் தையுப் அர்துகான் வீரமிக்க, ஆளுமைமையுள்ள இந்த உம்மத்தின் தலைவர் என்பதனை மீன்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

அல்லாஹூ அக்பர்.

இந்த ரானுவ சதிப்புரட்சியின் பின்னால் மேற்குநாடுகளும், அவர்களுக்கு துனைபோகும் சில அரபுத் தலைவர்களும் இருந்துள்ளதாக அர்துகான் குற்றம் சுமத்தியுள்ளார். தற்போது துருக்கி முழுமையாக அரச கட்டுப்பாட்டிலுள்ளது. சதிப்புரட்சி தோற்கடிக்கப்பட்டு மக்கள் பொஸ்பரன் தொங்கு பாலத்துக்கு அருகிலும், பொலிஸ் நிலையங்களுக்கு முன்னாலும் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

‪#‎அரேபியர்களுக்கும்‬ இந்த துணிவும் இறையச்சமும் இருந்திருக்குமானால் சிரியாவும், எகிப்தும் சிதைந்து போயிருக்கமாட்டாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s