தொலைபேசிக் காதலில் மயங்கிய ஆசிரியை..

child abuse mobile phoneபுத்தளம்: புத்தளத்தில் 24 வயதான யுவதிக்கு அடையாளம் தெரியாத நபர் எடுத்த தவறுதலான தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து இருவரும் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த தொடர்பு இவர்களுக்கு இடையில் காதலாக மாறியுள்ளது. நீண்டகாலமாக தொலைபேசியில் உரையாடி வந்த இவர்கள் வெளியில் சந்திப்பது என தீர்மானித்துள்ளனர்.

தொலைபேசி மூலம் அறிமுகமான இளைஞன், புத்தளத்தில் தான் ஒரு ஹொட்டலில் பணிப்புரிவதாக கூறி அந்த ஹொட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.பல நாட்கள் இவர்கள் இந்த ஹொட்டலில் சந்தித்துள்ளனர். இவ்வாறு இவர்கள் தொடர்ந்தும் ஹொட்டலுக்கு சென்று வந்துள்ளனர்.

child abuse mobile phone

ஒரு நாள் குறித்த இளைஞன் யுவதிக்கு பானம் ஒன்றை அருந்த கொடுத்துள்ளார். அதனை பருகிய யுவதிக்கு உறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இளைஞன் யுவதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, 6 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளார். தப்பியோடிய இளைஞனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பது பின்னர் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட யுவதி புத்தளம் பிரதேசத்தில் உள்ள முன்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிப்புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s