ஸாகிர் நாயக்கிற்காக கூட்டம் கூடுவதால் எதுவும் ஆகிவிடாது!

  • AK-99

zakir naikகாத்தான்குடி: பங்களாதேஷில் தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் இருவரைக் கைது செய்த பங்களாதேஷ் பொலிஸார், அத்தீவிரவாதிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டது. தாங்கள் ஸாகிர் நாயக்கின் போதனைகளால் கவரப்பட்டதாக இத்தீவிரவாதிகள் தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் உத்தியோகபூர்வமற்ற தகவல்களை வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த தீவிரவாதிகள் இருவரும் மும்பையைச் சேர்ந்த முஸ்லிம்கள் எனவும் இந்திய அரசு கூறுகிறது.

இவ்விடயம் இவ்வாறிருக்க, இவ்விடயத்தை ஊடகங்கள் முசுப்புக்காக செய்திப்பஞ்சத்தில் ஒன்றுக்கு முரணான போலி தகவல்களைப் பரப்பி வருகின்றன.

தழிழ்நாடு தௌஹீத் ஜமாஅத், போராட்டமொன்றை நடாத்தப்போவதாக அறிவித்திருக்கின்றது.
இவ்விடயத்தில் உசாரடைந்த, எமது தஃவா இயக்கங்களும் டொக்டர் ஸாகிர் நாயக்கிற்காக போராடப்போவதாகவும், அவருக்கு ஆதரவாக பேசப்போவதாகவும் அறிக்கைகள் விட்டிருக்கின்றன.

இவ்வாறான கூட்டங்களாலும், அறிக்கைகளாலும் எந்த மாற்றங்களும் நிகழப்போவதில்லை.
பிரச்சினை என்னவென்றால் டொக்டர் ஸாக்கிர் நாயக் கூறிய ‘ தீமைகளை ஒழிக்க முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக மாறவேண்டும்’ என்ற கருத்தேயாகும்.

இதனை தற்பொழுது சவுதியில் இருக்கும் டொக்டர் ஸாகிர் நாயக், சம்பந்தப்பட்ட இந்திய, பங்களாதேஷ் அரசுக்கு அவர் விளக்கமளிக்க வேண்டுமே தவிர, இவ்விடயத்தை பெரிதாக்கி, தஃவா அமைப்புக்களுக்கிடையிலேயே முரண்படும் இத்தகைய இலங்கை தௌஹீத் அமைப்புக்கள் குரல்கொடுப்பது டொக்டர் ஸாக்கிர் நாயக்கின் பிரச்சாரத்திற்கு எவ்விதத்திலும் துணைநிற்கப்போவதில்லை.

zakir naik

எதிரிகள் எதிர்த்த போதிலும், அல்லாஹ் அவருக்கு வழங்கிய மார்க்க, பொது அறிவுகளைக் கொண்டு, தனது பிரமாண்டமான ஊடகம் மூலமாக சமூகத்தைப் பிரிக்காமல், இயக்க சண்டைகளில்லாமல் செய்துவரும் அன்னாரது தூய இஸ்லாமியப் பிரச்சாரத்தை இந்தியாவால் நிறுத்த முடியாது.

டொக்டர் ஸாக்கிர் நாயக்கிற்கு பிரித்தானியா, கனடா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தாலும், இஸ்லாம் வேகமாகப் பரவிவரும் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஸாக்கிர் நாயக், ஓர் நாயகன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s