முகத்திரை அணிந்தால் ரூ.14 லட்சம் அபராதம்

hijab womanசூரிச்: சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிந்து பொது இடங்களுக்கு சென்றால் ரூ.14 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 26 மாகாணங்களில் சுயாட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாகாண அரசுகளுக்கும் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் உள்ளன.

இதன் அடிப்படியில், சுவிஸில் உள்ள டிசினோ மாகாணம் ‘பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிவதை தடை செய்வது தொடர்பாக கடந்த 2013ம் ஆண்டு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. மாகாண அரசின் இந்த திட்டத்திற்கு 65 சதவிகித மக்கள் ஆதரவு அளித்ததை தொடர்ந்து மத்திய அரசும் இதனை ஏற்றுக்கொண்டது.

இதன் அடுத்தக்கட்டமாக மாகாண அரசு அமுலாக்கிய இந்த புதிய சட்டம் கடந்த யூலை 1ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. புதிய சட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், தற்போது முதன் முதலாக இச்சட்டத்தின் கீழ் இருவர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து இஸ்லாமிய கவுன்சிலின் உறுப்பினரான Nora Illi என்பவர் பொது இடத்தில் முகத்திரை அணிந்த காரணத்திற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவரை தொடர்ந்து, பிரான்ஸ்-அல்ஜீரியா குடிமகனான Rachid Nekkaz என்பவரும் இந்த சட்டத்தை மீறியதால் அவருக்கு 200 பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும், Nora Illi மீதான அபராத தொகையை இன்னும் தீர்மானிக்கவில்லை.

புதிய சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிகபட்சமாக 10,000 டொலர்(14,59,150 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்கப்படும். புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், டிசினோ மாகாணத்திற்கு வரும் வெளிநாட்டு இஸ்லாமிய சுற்றுலா பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s