நோன்புப் பெருநாள் தொழுகை தொடர்பாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

islamic centre eidஅன்புப் பொதுமக்களுக்கு, அஸ்ஸலாமுஅலைக்கும்

நபிகளாரின் தூய ஸுன்னாவைப் பின்பற்றி வழமைபோன்று எதிர்வருகின்ற நோன்புப் பெருநாள் தொழுகையினை இன்ஷாஅல்லாஹ் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பெருநாள் தினமாக அறிவிக்கும் தினத்தில் காலை சரியாக 6.15க்கு கடற்கரை அன்வர் பள்ளிவாயல் முன்பாக நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

தொழுகைக்காக நேரகாலத்தோடு வருமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நபிகளாரின் தூய ஸுன்னாவைப் பின்பற்றி பெருநாள் தொழுகைகளை திறந்தவெளியில் நிறைவேற்றிட வேண்டும் எனும் உயரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு அல்லாஹ்வின் உதவியினால் தொடராக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். இப்பணியினை பல ஆண்டுகளாக நாங்கள் சிறப்பாக மேற்கொள்வதற்கு பொதுமக்களாகிய நீங்கள் வழங்கிவருகின்ற ஒத்துழைப்பு மகத்தானது. இருந்தபோதிலும் தொழுகைக்காக உரியநேரத்திற்கு வருகைதருவதில் ஒருசிலர் தவறிவிடுகின்றனர் இதனால் தொழுகின்ற விடயத்தில் இறுதி நேரத்தில் சிலமாற்றங்கள் மேற்கொள்ளவேண்டிய சங்கடமானதொரு நிலைக்கு நாங்கள் தள்ளப்படுகின்றேம். இதனால் நேரகாலத்தோடு வருகைதந்து தொழுகைக்காகக் காத்திருக்கின்ற சகோதர, சகோதரிகளுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதை உணரமுடிகின்றது.

அல்லாஹ்வின் தூதரை நம் உயிரை விடவும் மேலாக நேசிக்கும் நாம் அவர்களது ஸுன்னாஹ்வை எமதுவாழ்வில் நடைமுறைப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டவேண்டும். தொழுகை ஏற்பாட்டுப் பணிகளை பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் உங்களுக்காக செய்திருந்தும் உரியநேத்திற்கு சமுகம் தராது தாமதிப்பது நேரத்தோடு வருகைதரும் சகோதரர்களை பல்வேறு சிரமங்களுக்கு உட்படுத்துவதாகும் அத்துடன் ஸுன்னாவை நடைமுறைப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் மார்க்கத்தில் தெளிவில்லாத சிலர் இரண்டாம் மூன்றாம் ஜமாஅத்துக்கள் என நடாத்துவதற்கு தாமதமாகிவருகின்ற உங்கள் செயற்பாடு ஆதரவு வழங்குவதாக அமைந்துவிடுகின்றது என்பதை கவனத்திற் கொள்ளவும்.

islamic centre eid

தொழுகைக்காக வரக்கூடிய சகோதரர்களில் பலர் தங்களுக்கான விரிப்புக்களைக் கொண்டுவராமல் வெறுங்கையுடன் வருவதைத் தவிர்ந்து கொள்ளவேண்டும். ஏனெனில் இறுதிநேரத்தில் வருகைதரும் உங்களைப் போன்றவர்களுக்கு பாய் விரிப்புக்களை ஏற்பாடு செய்வது எமக்கு சிரமமானதொன்றாகும் என்பதை கவனத்திற் கொள்ளவும். அத்துடன் கீழ்க்குறிப்பிடப்படும் விடயங்களையும் அவசியம் கவனத்திற் கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

தொழுகைக்காக வருகைதரக்கூடிய சகோதர சகோதரிகள் கீழ்க்காணும் விடயங்களைக் கவனத்திற் கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

வீதிப்பாதுகாப்பு ஒழுங்கு நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

பெண்கள் அபாயா போன்ற இஸ்லாமிய அமைப்பிலான ஆடைகளை மாத்திரமே அணிந்து வரவேண்டும்.

வரும்போது வுழு செய்துகொண்டு தங்களுக்கான (முஸல்லா) பாய், விரிப்புக்களை கொண்டு வரவேண்டும்.

தொழுகை சரியாக காலை 6.15க்கு நடைபெறும்.

ஒரு தடைவ மாத்திரமே ஜமாஅத் நடைபெறும்.

முதல் ஜமாஅத் முடிவுற்றதும் பல ஜமாஅத்துகள் நடாத்துவதை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளவேண்டும்.

தொழுகை முடிவடைந்ததும் நடைபெறும் குத்பாப் பிரசங்கத்தில் அனைவரும் கலந்துகொள்ளவும்.

தொழுகை முடிவடைந்து கலைந்து செல்லும்போது ஆண் பெண் கலப்பு ஏற்படாதவாறு நடந்துகொள்ளவும்.

பிரசுரங்கள் வினியோகிப்பதற்கோ, வசூல்கள் மேற்கொள்வதற்கோ எவருக்கும் அனுமதிக்கப்படமாட்டாது.

எனவே தொழுகைக்காக வருகைதருபவர்கள் மேற்குறிப்பிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு செயற்படுமாறும், தொழுகை ஏற்பாடுகளை சீராக மேற்கொள்ள எமக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

ஏற்பாட்டுக்குழு
இஸ்லாமிக் சென்றர் – காத்தான்குடி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s