குர்ஆன், சுன்னாவின் நிழலில் பிறை பற்றிய இஸ்லாமிய ஷரீயாவின் வழிகாட்டல் என்ன ?
– உள்நாட்டு பிறையே சாத்தியம் என்பதற்கான சான்றுகள் என்ன ?
– பிறை விடயத்தில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடு என்ன ?
-அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் பிறை பற்றிய ஒருமித்த நிலைப்பாடும் அதற்கான தக்க சான்றுகளும்.
-பிறை விடயமும் சமூக ஒற்றுமையும்
போன்ற இன்னும் பல விடயங்கள் உள்ளடங்கலாக
“பிறை விடயத்தில் தெளிவு பெறுவோம், ஒன்றுபடுவோம் ” எனும் தலைப்பில் மாபெரும் பிறை விளக்க மாநாடு இன்ஷா அல்லாஹ்
இன்று ஞாயிற்றுக் கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி மெத்தை பெரிய ஜும்மா பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இதற்காக இலங்கையின் தலை சிறந்த மார்க்க ஆய்வாலரில் ஒருவரும் அக்குரணை ரஹ்மானியா மற்றும் மீஷானியா மதரசாக்களின் சிரேஷ்ட விரிவுரையாளருமான
அஷ் ஷைக் ரூமி (யூசுபி) ஹஸ்றத் அவர்கள் கலந்து சிறப்புரை ஆற்றவுள்ளதுடன், பல சான்றுகள் திரைக்காட்சிப் படுத்தப்படவுள்ளன.
எனவே உலமாக்கள் , புத்திஜீவிகள், ஊர் தலைமைகள், வாலிப சமூகம் உட்பட அனைத்து ஆண்களும் கலந்து தெளிவு பெறுமாறு அன்புடன் அழைப்பதோடு
குழப்பங்களை தவிர்த்து அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் வழிகாட்டலின் கீழ் ஒன்று பட்டு ரமழான் மற்றும் பெருநாட்களை சங்கைப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
ஏற்பாடு ,
SL YOUTH ISLAMIC MEDIA NETWORK
Leave a comment