கொழும்பு: வாகனங்களின் இறக்குமதித் தீர்வையை நிதி அமைச்சு கண்மூடித்தனமாக அதிகரித்தமைக்கு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஒட்டுமொத்தமாக தமது ஆட்சேபனையைத் தெரிவித்திருக்கின்றார்கள். திடீரென இந்தத் தீர்வை அதிகரித்தபடியால் எல்லா மட்டங்களில் உள்ளவர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த அசாதாரண நிலை குறித்து தாங்கள் ஜனாதிபதியிடம் முறையிடத் தீர்மானித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தங்களது வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்றவகையில் வாகனமொன்றை வாங்குவதற்கு சகல பிரஜைகளுக்கும் உரிமையுள்ளது எனவும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது நல்லாட்சி அரசின் கடமை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
எனவே, இது தொடர்பில் ஜனாதிபதியுடன் விரைவில் கலந்தாலோசிக்க தாங்கள் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர்கள் சிலர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
Published by

Leave a comment