நஸீர் அஹமட் மற்றும் சிப்லி பாறுக் ஆகியோரினால் செழிப்புறும் கல்குடா பிரதேசம்

kalkudahகல்குடா: கிழக்கு மாகாண சபை நிதி ஒதிக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத்தொகுதியில் மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் ஆகியோரின் தலைமையில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுக்கு 2016.05.25, 2016.05.26 மற்றும் 2016.05.28 ஆகிய தினங்களில் அடிக்கல்கள் நடப்பட்டன. அதன் விபரங்களின் தொகுப்பு.

மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லைக்கிராமத்திலுள்ள மட்/மம/ரிதிதென்ன இக்றா வித்தியாலயத்தில் இரண்டு மாடிக் கட்டிடம் அமைப்பதற்காக 55 இலட்சம் ரூபாவும், மட/மம/ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தில் ஆசிரியர் விடுதி அமைப்பதற்காக 23 இலட்சம் ரூபாவும், மட/மம/காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் வகுப்பறை மாடிக்கட்டிடம் அமைப்பதற்காக 85 இலட்சம் ரூபாவும், மட/மம/வாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் இரண்டு மாடி கட்டிடம் கொண்ட ஆராதனை மண்டபமும் மாணவர் வகுப்பறையும் அமைப்பதற்காக 1கோடி 50 லட்சம் ரூபாவும் முதலமைச்சரினால் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு 2016.05.25ஆந்திகதி (புதன்கிழமை) அடிக்கல்லும் நடப்பட்டதோடு, மட்மமவாழைச்சேனை ஹைராத் வித்தியாலயத்தில் புதிய இரண்டு மாடி கட்டடமும் திறந்து வைக்ப்பட்டது.

அத்தோடு, மட்/மம/ஓட்டமாவடி சாஹிரா வித்தியாலயத்தில் மூன்று மாடி கட்டிடம் அமைப்பதற்காக 40 இலட்சம் ரூபாவும், மட்/மம/ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயத்தில் இரண்டு மாடி கட்டிடம் அமைப்பதற்காக 55 இலட்சம் ரூபாவும், மட்/மம/ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் மூன்று மாடி கட்டிடம் அமைப்பதற்காக 78 இலட்சம் ரூபாவும், மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் வாசிகசாலை கட்டிடம் அமைப்பதற்காக 35 இலட்சம் ரூபாவும், மட்/மம/செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலயத்தில் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்காக 30 இலட்சம் ரூபாவும்,

நாசிவன் தீவில் பொது நூலக கட்டிடம் அமைப்பதற்காக 20 இலட்சம் ரூபாவும், நாசிவன் தீவில் குடிநீர் தாங்கி அமைப்பதற்காக 20 இலட்சம் ரூபாவும், கிண்ணையடி பிரதேசத்தில் கொங்ரீட் வீதி அமைப்பதற்காக 72 இலட்சம் ரூபாவும், கிண்ணையடி பிரதேசத்தில் படகு சேவை இறங்குதுறை அமைப்பதற்காக 4 இலட்சத்து 15,000 ரூபாவும், மாவடிச்சேனை பிரதேசத்தில் ஹபிப் கங்கானியார் வீதியை கொங்ரீட் வீதியாக மாற்றி வடிகான் அமைப்பதற்காக 83 இலட்சம் ரூபாவும், மாவடிச்சேனை பிரதேசத்தில் அஹ்மத் ஹிராஸ் வீதியை கொங்ரீட் வீதியாக மாற்றுவதற்காக 10 இலட்சம் ரூபாவும், பிரைந்துறைசேனை தாவூத் மோதிநார் வீதியை கொங்ரீட் வீதியாக மாற்றுவதற்காக 10 இலட்சம் ரூபாவும் முதலமைச்சரினால் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு 2016.05.26ஆந்திகதி (வியாழக்கிழமை) அடிக்கல்லும் நடப்பட்டது.

kalkudah

மேலும், ரஹ்மத் நகரில் குடிநீர் விநியோகத்திற்கான கிணறு மற்றும் நீர் தாங்கி அமைப்பதற்காக 10 இலட்சம் ரூபாவும், பாலை நகரில் குடிநீர் பாவனைக்கான பொதுக் கிணறு அமைப்பதற்காக 10 இலட்சம் ரூபாவும், காவத்தமுனை ஹிஸ்புல்லா வீதியை கொங்ரீட் வீதியாக மாற்றுவதற்காக 10 இலட்சம் ரூபாயும், மீராவோடை பாடசாலை குறுக்கு வீதியை கொங்ரீட் வீதியாக மாற்றுவதற்காக 10 இலட்சம் ரூபாவும், மீராவோடை பாடசாலை குறுக்கு வீதியில் வடிகாண் அமைப்பதற்காக 10 இலட்சம் ரூபாவும், தியாவட்டுவானில் மஸ்ஜிதுல் ஹுசைனியா பள்ளிவாசலுக்கான சுற்றுமதில் அமைப்பதற்காக 16 இலட்சம் ரூபாவும் முதலமைச்சரினால் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு 2016.05.28ஆந்திகதி (சனிக்க்கிழமை) அடிக்கல்லும் நடப்பட்டது.

கல்குடாவில் மூன்று நாட்களாக நடைபெற்ற இவ்அபிவிருத்தி பணிகளுக்கு அடிக்கல் நடுவதற்காக பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக், மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கிருஸ்னப்பிள்ளை (வெள்ளிமலை) ஆகியோரும் ஏனைய அதிதிகளாக முதலமைச்சரின் செயலாளர் அஸீஸ், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சித்திரவேல், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை செயலாளர் ஸபி. கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் சஹாப்தீன், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப்பணிப்பாளர் சேகு அலி, கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி றிஸ்மியா பானு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் றியாழ், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தலைவர் மீராமுகைதீன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ். இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Published by

Leave a comment