தெஹ்ரான்: இந்த வருடம் ஈரான் அதன் குடிமக்களை ஹஜ் வழிபாட்டிற்காக சவுதி அரேபியாவிற்கு அனுப்பாது என ஈரானின் பண்பாட்டு துறை அமைச்சர் அலி ஜன்னடி தெரிவித்துள்ளார்.சவுதி அதிகாரிகள் ரானிய புனித யாத்ரிகர்களின் பங்களிப்பிற்கு இடையூறு விளைவிப்பதால் அது சாத்தியமற்றது என அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஹஜ் பயணத்தின்போது, ரானியர்கள் பலர் உள்ளிட்ட , ஆயிரக்கணக்கான புனித யாத்திரிகர்கள் மோசமான கூட்ட நெரிசலில் சிக்கி கொல்லப்பட்டனர் .இச்சம்பவத்திற்கு ஈரான் சவுதி அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது. சிரியா மற்றும் எமன் உட்பட பல்வேறு போர் பகுதிகளில் இந்த இரு பிராந்திய போட்டி நாடுகளும் வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளதால் ஈரான் மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையேயான பதற்ற நிலை அதிகரித்துக் கொண்டு வருகிறது.
Leave a Reply