சங்காய்: சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் பிரம்மாண்ட பொழுதுபோக்கு பூங்கா ஒன்றை சீனாவில் திறந்துள்ளார்.
ஷாங்காயில் விரைவில் தனது பொழுதுபோக்கு பூங்காவைத் திறக்கவிருக்கும் ,அமெரிக்காவின் டிஸ்னி நிறுவனத்துக்கே சவால் விடும் வகையில் இது திறக்கப்பட்டுள்ளது.
நான்செங் நகரத்தில் திறக்கப்படவுள்ள வாங் ஜியன்லின் பூங்காவில் விதவிதமான சவாரிகள், வணிக மையங்கள் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் கொண்ட ஒரு காட்சியகமும் அதில் இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த பொழுதுபோக்கு பூங்காவின் மதிப்பு 3 பில்லியன் டொலர்கள் ஆகும்.
சீனா முழுக்க இதுபோன்று 15 பூங்காக்களை திறக்க வாங் ஜியன்லின் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் பேசிய வாங், மிக்கி மவுஸ் மற்றும் டொனால்ட் டக் காலங்கள் முடிந்துவிட்டன என்றார்.
மேலும், சீன நிறுவனங்கள் தங்கள் சொந்த கலாசாரத்திலிருந்தே உத்வேகம் பெறவேண்டும் என்றார் அவர்.
Leave a comment