களத்தில் குதித்தார் சிப்லி

shibly1காத்தான்குடி: கடந்த இரு நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக தாழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல வீதிகளும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதோடு, அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2016.05.08ஆந்திகதி (இன்று) காத்தான்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் நேரில் சென்று பார்வையிட்ட மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் மக்களின் நலன்கருதி அவசரமாக செப்பனிடப்பட வேண்டிய வீதிகளையும் அடையாளம் கண்டுகொண்டதோடு, இவ்வீதிகளை புணரமைப்பதற்கு தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வதாக பொதுமக்களிடம் குறிப்பிட்டார்.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பெய்த அடைமழை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்தால் மாத்திரமே அரச உதவிகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்கிற இக்கட்டான நிலை காணப்படுவதோடு, இயலுமான அளவுக்கு உதவிகளை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

shibly1

எனவே மட்டு மாவட்டத்தில் இருக்கின்ற தனவந்தர்கள், சமூக நலன் விரும்பிகள் மற்றும் சமூகசேவை போன்ற அமைப்புக்கள் தங்களால் இயன்ற உதவிகளை வெள்ள நீர் புகுந்துள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு தங்களின் உதவிகளை வழங்கி அம்மக்களின் கஸ்டத்தை ஓரளவேனும் குறைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்டத்தில் அங்கம் வசிக்கும் சமூகசேவை அமைப்புக்களை கேட்டுக்கொண்டார்.

shibly

  • M.T. ஹைதர் அலி

Published by

Leave a comment