இரு ஆசிரியர்கள் மாணவிகள் மீது பாலியல் சேட்டை காத்தான்குடியில் சம்பவம்..!!

  • ஜுனைட். எம்.பஹ்த்

abuseகாத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடியில் உள்ள பிரபல முஸ்லிம் மகளீர் பாடசாலையில் கல்விகற்பிக்கும் இரு  ஆசிரியர்களால் அதே பாடசாலையில் கல்வி பயிலும் சாதாரண தர வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டு வந்ததாக தெறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆசிரியர்கள் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளும் இருக்கத்தக்க கடந்த இரு வருடங்களாக இந்த கேவலமான பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுவருவதாக பாடசாலை வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது..

இவ் ஆசிரியரிகளில் ஒருவர் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற ஒருவர் மூன்று மாத காலம் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அறியக்கூடியதாகவுள்ளது..

மாதா பிதா குரு தெய்வம் என பெற்றோருக்கு நிகராக போற்றப்படக்கூடிய ஆசான்கள் தனது குழந்தைகள் போன்று என்னக் கூடிய பெண் பிள்ளைகளிடம் காம கொடுரம் கொண்டு பாலியல் சேட்டைகளை மேற்கொள்வது பெற்றோர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது..

இதுபோன்ற செயற்பாடுகள் தொடர்கதையாகவே இருக்கிறது. இதற்கு பொறுப்புவாய்ந்த நிறுவனங்கள், சமூக அமைப்புக்கள், ஊர் தலைமைகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் இது போன்ற அசிங்கங்களில் இருந்து நமது சமூகத்தை பாதுகாப்பது பாரிய சிரமமாகிவிடும்.

இது போன்ற ஆசிரியர் வேடம் பூண்ட காம கொடூரர்களில் இருந்து எமது பிள்ளைகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் அவதானமாக செயற்படல் வேண்டும்..

அத்துடன் இது போன்ற காம கொடூரர்களுக்கு தகுந்த சட்டப்படியான தண்டனைகள் வழங்கப்படுவதுடன் இவ்வாறான குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாகவும் அமைய வேண்டும்..

இது போன்று துஷ்பிரயோகங்கள் நாட்டின் பல பகுதிகளில் விஷமாக பரவிவருகிறது ஆகவே இது நாட்டிட்கும் சமூகத்திற்கும் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது இது தொடர்பில் அரசும் பெற்றோரும் விழிப்புடன் இருப்பது அவசியமாகும்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s