மேதின கூட்டம்: ஏமாந்து போன மைத்திரியும் தோல்வியடைந்த மஹிந்தவும்

mahinda maithiri nimalகொழும்பு: நாட்டின் பிரதான கட்சிகளின் மேதின பேரணியும் கூட்டமும் நேற்று நடைபெற்றது. இதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டதாக அதனை நடத்திய ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த பேரணிகளின் போது கலந்து கொண்ட மக்கள் தொடர்பான தகவல்களை அடங்கிய புள்ளிவிபரத்தினை புலனாய்வு பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியினால் பொரளை கெம்பல் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது. இந்தக் கூட்டத்தில் 75000 மக்கள் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது. இந்த எண்ணிக்கையில் மாற்றமடைந்து அதிகரிக்குமே தவிர குறைவடையாதென புலனாய்வு பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் காலியில் இடம்பெற்ற மேதின கூட்டத்தில் 40 ஆயிரம் பேர் வரையில் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை பிரமாண்டமான பிரச்சாரத்திற்கு மத்தியில், மஹிந்த தலைமையில் கிருலப்பனையில் நடைபெற்ற மேதின கூட்டத்தில் 15 ஆயிரம் பேர் வரையில் கலந்து கொண்டதாக கலந்துகொண்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிருலப்பனை பேரணியில் கலந்துகொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 41 என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பேரணிக்கு அனைத்து மதம் மற்றும் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கிருலப்பனையில் இடம்பெற்ற பேரணியில் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் தெற்கில் இருந்து அதிக மக்களும் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த அளவில் கலந்து கொண்ட பேரணியாக கிருலப்பனை பேரணி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி கொழும்பு பீ.ஆர்.சீ மைதானத்தில் நடத்திய பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 7000 மாத்திரம் எனவும், அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு மே தின பேரணியில் கலந்துகொண்டு எண்ணிக்கைக்கு சமமானதென தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேரணி கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதில் 800 – 1000 இடைப்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு மே தின பேரணி தொடர்பில் அதிக பிரச்சாரங்கள் ஒன்றையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s