மைத்திரியின் மேடையிலும் மதுபானத்துக்குப் பஞ்சமில்லை

beer alcoholகாலி: காலியில் நேற்று இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஆதரவாளர்களுக்கும் மதுபான வகைகள் தாராளமாக விநியோகிக்கப்படுகின்றது. காலி கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த ஆதரவாளர்களுக்கு முக்கிய அமைச்சர்கள் பலரும் மதுபான வகைகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

இன்னும் சிலர் அருகில் உள்ள மதுபான சாலைகளுக்கு மொத்தமாக பணம் செலுத்தி, டோக்கன் பெற்று அதனை தமது ஆதரவாளர்கள் இடையே விநியோகித்துள்ளனர்.குறிப்பாக சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, பிரதியமைச்சர் திலங்க சுமதிபால போன்றோரின் ஆதரவாளர்களுக்கு எதுவித கட்டுப்பாடும் இன்றி மதுபான வகைகள் தாராளமாக விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதுபானம் அற்ற நாடொன்றை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றார். அவரது பிரதான சகாக்கள் மதுபானங்களை இறைத்து ஆதரவாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதிலும் குறிப்பாக துமிந்தவின் ஆதரவாளர்கள் அவரது பெயர் பொறித்த டீசேர்ட்டுகளுடன் மதுபானக் கடைகளில் மொய்த்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by

Leave a comment