காத்தான்குடி: உழைக்கும் வர்க்கத்தினரின் உன்னதத் திருநாள் மே தினம். உலகமெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபடுகின்ற உன்னதத் திருநாள். உழைப்பே உயர்வு, உழைப்பிற்கேற்ற ஊதியம், உழைப்பிற்குரிய உரிமைகள் அனைத்தையும் பெற உழைப்பாளிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்.
உலகெங்கும் ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறு வடிவங்களில் தலைதூக்கும் ஆதிக்கங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிராகப் போராடும் உழைக்கும் மக்களுக்கு உத்வேகமும், உற்சாகமும், ஊக்கமும், உறுதியும் வழங்கி மலர்ந்துள்ள இந்த மே நாளில் நாடு வாழப் பாடுபடும் தொழிலாளர் வர்க்கத்தின் அடிமைத்தனங்கள் நீங்கி மலர்ச்சி பெற வாழ்த்துகின்றேன்.
அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் 1886ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம்திகதி உரிமைக்காக குரல் கொடுத்து பல தியாகங்கள் செய்து உழைக்கும் வர்க்கத்தின் உரிமையை நிலை நாட்டிய மே மாதம் 1ஆம்திகதி 1889ஆம்ஆண்டிலிருந்து உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தில் எமது நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தெழிலாளர்களின் நலன்கருதி பல திட்டங்களை அமுல்படுத்தியுள்ளதோடு, அவர்களுக்கான சலுகைகளையும் இந்த நல்லாட்சியில் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வழி வகுத்துள்ளமையையும் காணக்கூடியதாக உள்ளது என தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டார்.
M.T. ஹைதர் அலி
செய்தியாளர்
Published by

Leave a comment