-
எம்.ரி.எம். யூனுஸ்
காத்தான்குடி: இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் இஸ்லாமிய தஃவா வழிகாட்டல் பிரிவினூடாக பெண்கள் ஆண்களுக்கான மாதாந்த அறிவூட்டல் வழிகாட்டல் நிகழ்வு இன்று 30.04.2016 சனிக்கிழமை தாறுல் அர்கம் இஸ்லாமிய அறிவூட்டல் மையத்திலும் இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய மஸ்ஜிதிலும் இடம்பெற்றது.
பெண்களுக்கான அறிவூட்டல் வழிகாட்டல் சொற்பொழிவு “நமது நாளாந்த கருமங்களை நன்மை சொரியும் இபாதத்களாய் மாற்றுவோம்” எனும் தலைப்பிலும் ஆண்களுக்கான சொற்பொழிவு “வாழ்க்கையை முழுமையாக இபாதத்தாக மாற்ற இஸ்லாம் கூறும் வழிகாட்டல்கள்” எனும் தலைப்பில் பாதிஹ் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எம்.அக்ரம் B.A. அவர்கள் நடாத்தினார்.
பெருமளவிலான பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டதுடன் ஊர்ப்பிரமுகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Leave a comment