அடிவயிற்றுக் கொழுப்பை கரைப்பது ஏன் கடினமாக உள்ளதென தெரியுமா? அறிவியல் கூறும் விளக்கம்

fatஉடலிலேயே அடிவயிற்றில் தான் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருக்கும். அதே சமயம் அப்பகுதியில் தேங்கும் கொழுப்புக்களை எளிதில் கரைக்க முடியாமல் பலரும் தவிக்கின்றனர்.பொதுவாக அடிவயிற்றில் கொழுப்புக்கள் தேங்குவதற்கு ஹோர்மோன்கள் வயது பாலினம் மற்றும் பல காரணிகள் உள்ளன. வயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகரித்தால் அதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை வாழ்நாள் முழுவதும் சந்திக்க வேண்டியிருக்கும்.அதற்கு முன் அடிவயிற்றில் சேரும் கொழுப்புக்களைக் குறித்த உண்மைகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பலர் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சேரும் கொழுப்பைக் குறைக்க முயற்சிப்பார்கள். ஆனால் அறிவியலோ எப்போதுமே ஒரு இடத்தில் தேங்கும் கொழுப்பை மட்டும் குறைப்பது முடியாத காரியம் என்று சொல்கிறது. மேலும் ஒரு இடத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளால் உடலின் இதர பகுதிகளில் உள்ள கொழுப்புக்களும் குறைய ஆரம்பிக்கும்.

நம் உடலில் கொழுப்புக்கள் எங்கு தேங்க வேண்டும் என்பதை பாலினம் மற்றும் மரபணுக்கள் போன்றவை தான் தீர்மானிக்கிறது. அதில் பெரும்பாலும் முதலில் அடிவயிற்றில் தான் அதிகம் தேங்கக் செய்யும்.

fat

அடிவயிற்றுக் கொழுப்பைக் கரைக்க வேண்டுமானால் டயட், உடற்பயிற்சி போன்ற இரண்டுமே முக்கியம். ஒருவேளை உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகம் இருந்தால் உடற்பயிற்சியை இன்னும் சற்று அதிகமாக செய்தால் கார்டிசோல் தொடர்பான கொழுப்பு பிரச்சனைகள் எழுவதைத் தடுக்கலாம்.

ஒருவர் அதிக மன அழுத்தத்துடன் இருந்தால் உடலில் கார்டிசோல் என்னும் ஹோர்மோன் அதிகம் வெளியிடப்படும். மன அழுத்தம் தான் உள்ளுறுப்பு கொழுப்பிற்கு முக்கிய காரணம். மொத்தத்தில் அடிவயிற்றில் கொழுப்பு தேங்குவதற்கு மன அழுத்தமும் முதன்மையான காரணம் ஆகும்.

இன்சுலின் கூட அடிவயிற்றில் கொழுப்பு தேங்குவதற்கு ஓர் காரணமாகும். உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகமாக இருக்கும்.

gym fat

ஒருவருக்கு உள்ளுறுப்பு கொழுப்பு இருப்பின் அதனால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளான டைப்-2 நீரிழிவு இதய பிரச்சனைகள் உயர் இரத்த அழுத்தம் குறிப்பிட்ட வகையான புற்றுநோய்கள் போன்றவை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில் அடிவயிற்று கொழுப்பு அதிகம் தேங்கினால்இ அது ஒருவரை மெதுவாக அழிக்கும்.

ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களும் அடிவயிற்றில் கொழுப்பை தேங்கச் செய்யும். முக்கியமாக இறுதி மாதவிடாயை சந்தித்த பெண்களுக்கு தான் இந்நிலையினால் தொப்பை அதிகம் வரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s