முழு நிலவையே சோற்றில் மறைத்த அமெரிக்கா

spaceமொஸ்கோ: 1960-களில் முதன்முதலாக யார் நிலவுக்கு செல்வார்கள் என்று வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடையே கடும் போட்டியே நடந்தது. அந்த எதிர்பார்ப்பில், 1969 ஜூலை 20ம் திகதி முதன் முதலாக நிலவில் மனிதன் காலடி வைத்தான் என்ற சாதனையை அமெரிக்காதான் தட்டிச் சென்றது. ஆனாலும், அமெரிக்க வெண்வெளி வீரர்கள் விண்கலத்தில் அங்கு சென்றது வெறும் புரளி என்ற பேச்சுகளும் அப்போது எழுந்தது.

அமெரிக்கா மீது பொறாமையில் சிலர் பேசுவதாகவும் பொருட்படுத்தப்படாமல் போனது. சரியான ஆதாரங்கள் முன்வைக்கப்படும்போதுதான் சதி இருக்கும் திசையே மாறுகிறது. இருநூறுக்கும் மேற்பட்ட ரஷ்ய மற்றும் சீன விண்வெளி விஞ்ஞானிகள் ஆதாரங்களை அம்பலப்படுத்த அமெரிக்காவை நிர்பந்திக்கும் மனுக்களில் கையெழுத்தும் போட்டுள்ளனர்.

ஒரே மாதிரியான பின்புலம்

அமெரிக்கா தனது விண்வெளிப் பயணம் தொடர்பாக வெளியிட்ட பல புகைப்படங்களில் ஒரே மாதிரியான பின்புலம் கொண்ட காட்சிகள் தெரிகின்றன.

கண்ணாடியில் தெரியும் பொருள்

நிலவில் இறங்கிய புகைப்படம் ஒன்றில் விண்வெளி வீரரின் ஹெல்மெட்டின் கண்ணாடியில் விளக்க முடியாத பொருள் ஒன்று பிரதிபலிப்பது தெரிகிறது.

ஒரு நட்சத்திரம் கூட இல்லையா?

நிலவில் இறங்கியது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட புகைப்படத் தொகுப்பு, மற்றும் வீடியோவில் வானின் பதிவுகளில் ஒரு நட்சத்திரம் கூட பதிவாகவில்லை.

வரலாற்றுப் பிழை

மேலே சொல்லப்பட்டுள்ள சான்றுகள் அமெரிக்கா முதன்முதலாக நிலவில் இறங்குவதற்கு திட்டமிடுவதற்கு பதிலாக, முதலில் இறங்கியதாக வரலாற்றில் இடம்பிடிக்க திட்டமிட்டுள்ளதையே காட்டுறது.

இதை வேறு நாடுகள் செய்திருந்தால் உலக அளவில் பெரிய சந்தேகம் அப்போதே எழுந்திருக்கும் அதை பொய்யாக்கும் முயற்சியில் அமெரிக்காவே இறங்கியிருக்கும்.

அமெரிக்கா ஒரு மிகப்பெரிய வல்லரசு நாடு என்பதல் உலகம் நம்பியது. இன்னும் நம்புகிறது.

space

மறைக்க முடியாத உண்மை

வானியல் ஆராய்ச்சியில் பெரிய மோசடியை வரலாறாக்குவது அழகல்ல. ஆயுத பலம், அறிவியல் பலத்தோடு நம்பகத்தன்மையும் நாட்டுக்கு முக்கியம். முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஆனால், அமெரிக்கா செய்திருப்பது முழுநிலவையே சோற்றில் மறைத்த செயல்.

உலக நாடுகளில் எழுந்துவரும் இந்த சந்தேகத்திற்கு ஆதாரப்பூர்வமான பதிலை அமெரிக்கா இன்னும் அளிக்காது இருப்பது சந்தேகத்தை அதிகப்படுத்துவதோடு, மவுனம் சம்மதம் என்ற இன்னொரு தமிழ் பழமொழியையும் உண்மையாக்குகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s