பெண்களை குறிவைத்து தொடுக்கப்படும் அழைப்புக்களும் எமது சமூகமும்

  • MJ

phoneகாட்சி ஒன்று:

‘ஹலோ யாரு..?’

‘நீங்க யாரு…?’

‘நான் அ******து ல இருந்து கதைக்கன்’

‘சரி என்ன.’

‘நீங்க எந்த ஊரு…? பேரு என்ன….?’

உனக்கு எதற்கு இதெல்லாம் யாரு வேனும்…?

‘இல்ல …. வைச்சிடாதீங்க… உங்களோட பேசனும்..’

‘ஏன் என்னத்துக்கு பேசனும்?’

‘உங்க பேரு என்ன என்று சொல்லுங்களேன்…..’

‘சொல்ல மாட்டேன். நீ முதல்ல விசயத்த சொல்லு…’

‘அது வந்து… உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு’

‘எனக்கு இப்ப நேரமில்ல போன வை’

‘இல்ல பிளீஸ்… வைச்சிடாதீங்க….’

ஒரே கட்…

மீண்டும் பல முறை அதே இலக்கத்தில் இருந்து அழைப்பு வருகிறது.
ஆசை வார்த்தைகளுக்குக்கு மயங்கிய நங்கைகள் தூண்டலில் விழுந்திட தருணம் வருகிறது.
இல்லை. இல்லை. நமக்கு எதற்கு இந்த நாய் தொடர்பு என நினைக்கும் ஒழுக்கமானவள் அந்த இலக்கத்தை ஒரே ‘புளக்’ செய்துவிடுகிறாள்.

காட்சி இரண்டு:

‘ஹலோ நான் சிக்கந்தரோட  பேசலாமா…?

‘இது ரோங் நம்பர்’

என்று கூறுவிட்டு கட்பண்ணிவிட்டால் இந்தக் கள்ளத் தொடர்புக்கு வழிவராது.

ஆனால்…

துண்டில் போடுபவன் கேஸை இப்படி மாற்றிப்போடுவான்

‘சொறி, சிக்கந்தரோடநம்பர் இல்லயா..? அப்ப நீங்க யாரு??’

நான் என்று… இழிச்சிக்கொண்டு பதிலளித்தால்
இரண்டாம் கேள்வி தொடரும்.
அதன் பின்னர் தொடர்பு நகர்கிறது கள்ளத்தனமாக.

காட்சி மூன்று:

பெயர் விபரங்களை தெரிந்துகொண்டே நேரடியாக அழைப்பை விடுவது.

‘ஹலோ.. பா**னா எப்படி சுகமா..?

‘யாரு நீங்க…(அல்லது நீ..?)’
என்ன பா**னா என்னத் தெரியாது எங்கிறீங்களே.

‘நீ யாரு….. (அல்லது யாருடா)…?

‘உங்கள எனக்கு நல்லாத் தெரியும். கல்யாணம் முடித்து 2 வருஷம். ஒரு மாசத்துல உங்கள மச்சான் உட்டுட்டுப் போயிட்டாரு……’

‘வைடா நா.. ‘ என்றால் அவனது தூண்டிலுக்கு முற்றுப்புள்ளி. இல்ல மதி மயங்கினால் சீரழிவு தொடர்கிறது.

காட்சி நான்கு:

கடன், வட்டி போன்ற விடயங்களில் தனது முழு விபரங்களையும் வழங்கிவிட்டு கனவன்மார்களைப் பிரிந்திருக்கும் (விவாகரத்து, வெளியூர், வெளிநாடு) பெண்களை நேரடியாகவே குறித்த நிறுவனத்தின் முகாமையாளர், இரண்டாம் நிலை முகாமையாளர்கள், தரகர்களின் பாலியல் தொல்லை.

ஒன்று கனவனுக்குத் தெரியாமல் லோன், வட்டி எடுத்து பின்னர் அப்பணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் இளம் வயதுப் பெண்கள், முந்தானை விரிப்புக்கு இணங்குதல். அல்லது கனவனுக்கு தெரிந்து கடன் பெற்றிருந்தாலும் பாலியல் வல்லுறவுகள் இவ்வாறான நிறுவனங்களில் இடம்பெறுவதாக ஊடகங்கள் அண்மையில் தெரிவித்திருந்தன.

காட்சி ஐந்து:

‘ஹலோ…’

‘யாரு….?’

‘நீங்க எங்க இருந்து கதைக்கிறீங்க?’

‘கா****டி’

‘நீங்க….?’

‘ச****றை’

‘உங்கட குரல் நல்லா இருக்கு’

‘இப்ப என்ன வேனும்…?’

‘நீங்கதான் வேனும் ராத்தா’

‘வைடா’

‘வைக்காதீங்க ராத்தா… உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லனும்..’

‘சொல்லு…’

‘நான் உங்கள விரும்புறன்..’

‘சரி, வேறு என்ன சொல்லனும்..’

‘நீங்க சரி என்றா உங்கட ஊருக்கே வாரேன்’

‘எனக்கு 5 பிள்ளைங்க இருகாங்க, என்னைக் கலியானம் முடித்து பார்த்துக்குவீயா…’

…..நீண்ட நேரத்தின் பின்னர் பதில் வந்தது.

‘ஓ’

‘சரி. உனக்கு எப்படி என்ட நம்பர் கிடைச்சிச்சு.?’

‘நான் ஓ.எல். படிக்கன் ராத்தா, எனக்கு ஒரு பெண்தொடர்பு தேவைப்படுது, இரவில படிக்கும்போது யாருக்காவது இப்படித்தான் சும்மா மனசில வார நம்பர டைப்பன்னி அடிப்பன், அது சிலவேல ஆம்பிளைங்ககிட்ட போகும். போனா நான் கட் பன்னிட்டு வேறு ஒரு நம்பர ட்ரை பன்னுவேன்’

‘இதெல்லாம் விட்டுப்போட்டு உங்கட உம்மா, வாப்பாட்ட சொல்லி முதல்ல கலியாணத்த முடி. இல்லாட்டி நீ நல்லாப் படித்து தொழில் ஒன்ற செஞ்சிட்டு கலியாணத்த முடி’

‘எனக்கு ஏலா ராத்தா வைக்காதீங்க, நீங்க பேசிட்டே இருங்க…’

‘வைடா’ (ஒரே கட் போனை)

இவ்வாறான சம்பவங்களும் எமது பகுதிகளில் மாத்திரமன்றி பல பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றன.

வரும் அநாமோதய அழைப்பு இலக்கத்தை பெற்று, அழைப்பு எண்ணை வழங்கும் நிறுவனத்துடன் (நெட்வோர்க்) தொடர்புகொண்டு ஆள்விபரங்களைக் கேட்டால், விபரங்கள் பொலிஸாரின் வேண்டுகோளின்றி தர முடியாது என ஒரே பேச்சில் கதையை முடித்துவிடுகின்றனர்.

பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தால் ஓடுகிற பாம்பைத்தூக்கி தலையில் வைத்த கதையாகிவிடும்.

இவ்வாறான பாலியல் நோக்க அழைப்புக்கள் கண்ணிப்பெண்கள், கனவனோடு இணைந்துவாழும் பெண்கள், தனிமையிலிருக்கும் பெண்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பிரபலங்கள் என்று எவரையும் விட்டு வைக்காமல் தொடுக்கப்படுகின்றன.

தினமும் இடம்பெற்றுவரும் இதைவிட நாவுகூசப்படும் காட்சிகள் சமூக நலன்கருதி ‘யுவர்காத்தான்குடி’ தவிர்த்துக்கொள்கிறது. அனைவருக்கும் எளிதாக விளங்ககக்கூடிய அளவுக்கு காட்சிகள் ஐந்து வரைக்கும் இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக இன்று விரல் நுணிவரைக்கும் நுழைந்துவிட்ட பாலியல் காட்சிகள் இவ்வாறான சம்பவங்களுக்கு முதன்மையாகவும், போதைவஸ்துப் பாவனை இரண்டாவது காரணமாகவும் அமைகின்றன.

பெண்களை நோக்கித் தொடுக்கப்படும் இவ்வாறான பாலியல் அழைப்புக்களை ஊர், சமூகம் சேர்ந்து நிறுத்தாவிட்டால், எதிர்காலத்தில் எமது சமூகம் எதிர்நோக்கும் பாரிய சவாலாக இவ்வழைப்புக்கள் இடம்பிடிக்கும்!MJ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s