அம்பாறை மாவட்ட 25 விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு!

  • ஹாசிப் யாஸீன்

hareesஅம்பாறை: அம்பாறை மாவட்ட 25 விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் 4 கோடி 45 லட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கமைவாக கல்முனை தொகுதிற்குட்பட்ட மருதமுனை மசூர் மௌலானா, நற்பிட்டிமுனை லீடர் அஷ்ரஃப், கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி, கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை, பாண்டிருப்பு, சாய்ந்தமருது, கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை ஆகிய விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திற்கு 1 கோடி 65 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சம்மாந்துறை தொகுதிற்குட்பட்ட சம்மாந்துறை, இறக்காமம், வரிப்பத்தான்சேனை, நாவிதன்வெளி 12ம் கொலனி அமீர் அலி ஆகிய விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திற்கு 70 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொத்துவில் தொகுதிற்குட்பட்ட காரைதீவு கனகரெட்னம், திருக்கோவில், நிந்தவூர், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலயம், பொத்துவில் பசறிச்சேனை ஆகிய விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திற்கு 1 கோடி 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

harees

அம்பாறை தொகுதிற்குட்பட்ட கெமுனுபுர, ஜெயவர்தனபுர, நாமல் ஓயா பாடசாலை, உகன, பதியத்தலாவ ஆகிய விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திற்கு 70 லட்சம் ரூபாவினையும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இம்மைதானங்களின் அபிவிருத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் விளையாட்டுத்துறை அமைச்சினால் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அபிவிருத்தி வேலைகளை உடன் ஆரம்பிக்குமாறு அரசாங்க அதிபருக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்ஹரீஸினால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள பிரதேசத்திலுள்ள 25 விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் இந்நிதிகளை ஒதுக்கியமைக்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள விளையாட்டுக்கழங்கள், விளையாட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தங்களது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s