கடவுள் அமைத்து வைத்த…..
ஹோட்டலில் சமைத்து வைத்த உணவு
பலர்க்கும் நஞ்சாக ஆகும்.
புண்ணாக்கை உண்கின்ற ருசியில்
ஆக்கி வைப்பானே கோக்கி இங்கு.
(கடவுள்)
நான் ஒரு வெய்ட்டர்.
இன்று நான் ஒரு கதை சொல்வேன்.
ஓங்கிய பெரும் அண்டா.
அதில் அருகிலொரு அரிசிபேக்
அரிசி மூட்டையிலே அந்த 50 கிலோ பேக்கினிலே
ஆண் எலி இரண்டுண்டு
பெண் எலி இரண்டுண்டு
அதிலுள்ள அரிசை உண்டு
அதிலொரு ஆண் எலி
அதனிடம் பெண் எலி
இரண்டுக்கும் கேஸ்டிக் வந்து
அன்பே…அரிசி…பழசு அத்தான்
(கடவுள்)
கொத்தும் தகரத் துண்டு
கொதிக்கின்ற கறிச் சட்டி
கொசு மொய்த்து இருக்குமம்மா
தோசைகள் கல்லினில்
தூசுகள் படிந்து
துடைக்காமல் இருக்கும அம்மா.
காண் ஒன்று அருகிலே
கழிவு நீர் ஓடிட
கடும் நாற்றம் வந்ததம்மா
பொல்லாத கெமிக்கல்கள்
புளித்ததை ருசியாக்க
போட்டு வைப்பாரம்மா.
(கடவுள்)
கன்றாவி உணவுக்கு
கலர் டைகள் பலபோட்டு
காட்சிக்கு வைப்பாரம்மா.
முன்னாலே ஷோ காட்டி
பின்னாலே ஊத்தை கட்டி
என்னென்று சொல்ல அம்மா
(கடவுள்)
பசியோடு பலபேர்கள்
பல நேரம் உணவுண்ண
பார்க்காமல் வருவாரம்மா
உள்ளதில் ஒன்றிரண்டை
உணவாக உண்டிட்டு
பெரு தொகை கொடுப்பாரம்மா
அப்பாவி ஆண் பெண்கள் தப்பாக உண்பது அப்போது புரியாதம்மா- எது
எப்போது தாக்குமோ
நோய் வந்த பின்னர்தான்
நொந்து போய் திரிவாரம்மா
- முகமட் நிஷவ்ஸ்

Leave a comment