இலங்கையும் எயிட்ஸ் தாய்லாந்து நங்கைகளும்

thailand girlsகொழும்பு: கொழும்பில் உள்ள தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்களுக்கு எயிட்ஸ் நோய் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த மாதம் வெள்ளவத்தைப் பகுதியில் விபச்சார விடுதியினை நடத்தி சென்ற பெண்களை கைது செய்த போது இதில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

குறித்த பெண்களை நேற்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இவர்களை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த தாய்லாந்துப் பெண்களுக்கு எயிட்ஸ் இருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இது தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்று வைத்தியர் சிசிரலியனகேவிடம் வினவிய போது நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் இந்த தகவலை வெளியிடமுடியாது என்று தெரிவித்ததோடு, ஒவ்வொருவரிடமும் மேற்கொள்ளப்படும் எச்.ஐ.வி. பரிசோதனை அறிக்கையானது மிகவும் இரகசியமான ஒன்று என தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் எயிட்ஸ் தொற்றுக்குஉள்ளானவர்களும் இருப்பதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களுக்குள் 70 எயிட்ஸ் நோயாளிகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இதில் ஓரினச் சேர்க்கை மூலமே அதிகளவானோர் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment