காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பொது மக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்

jammiyya 2அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ

பொதுவாக நாடு முழுவதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் வெப்பமும் சூடான காலநிலையும் காணப்படுவதை நாம் அனுபவித்து வருகின்றோம். இந்நிலையிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு இது தொடர்பிலான றஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது வழிகாட்டல்களை பின்பற்றுவது கடமையாகும்.

வெப்பமான மற்றும் சூடான கால நிலையின் போது றஸூல் (ஸல்) அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹூத்தஆலாவிடம் அதிகமாக பிரார்த்திப்பவர்களாகவும், பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும், ஸதகாக்களையும், தான தர்மங்களையும் வழங்குபவர்களாகவும் காணப்பட்டார்கள். எனவே, மேற்படி வழிகாட்டல்களை நாமும் பின்பற்றி, எல்லாம் வல்ல அல்லாஹூத்தஆலா இந்நிலைமையை சீராக்குவதற்கு பிரார்த்திப்போமாக.

மேலும், மழைவேண்டித் தொழும் தொழுகை தொடர்பில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடம் வழிகாட்டல்களை கோரியபோது, வரட்சி, பஞ்ச நிலைமை ஏற்படும் பட்சத்திலேயே மழை வேண்டித் தொழும் தொழுகை ஸூன்னாவாகும் என ஆலோசனை வழங்கியுள்ளதால், அவ்வாறான நிலைமை ஏற்படுமிடத்து இன்ஷா அல்லாஹ் அதற்குரிய எற்பாடுகளை ஜம்இய்யா மேற்கொள்ளும் என்பதையும் இத்தால் பொதுமக்களுக்கு அறியத்தருகின்றது.

அவ்வாறான ஒரு இடர்நிலை ஏற்படாமல் எல்லாம் எல்ல அல்லாஹூத்தஆலா
எம்மனைவரையும் பாதுகாப்பானாக.


அஷ்ஷெய்க் MCM. றிஸ்வான் (மதனி)BAஅஷ்ஷெய்க் MHM. ஜெலீல் (மதனி) BA
உப தலைவர் ​​செயலாளர்​
18.04.2016
…………………………………………………………………

Published by

Leave a comment