உற்பத்தித் திறண் போட்டியில் நான்காம் இடத்தினைப் பெற்ற காத்தான்குடி பிரதேச செயலகம்

  • எம்.எச்.எம். அன்வர்

ds officeகாத்தான்குடி: அகில இலங்கை ரீதியில் பிரதேச செயலகங்களுக்கிடையில் இடம்பெற்ற உற்பத்தித் திறண் போட்டியில் நான்காம் இடத்தினைப் பெற்று காத்தான்குடி பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டதையிட்டு விருது வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ். எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் பிரதேச செயலகத்திற்கு பல வழிகளிலும் பங்களிப்பு வழங்கிய நலன்விரும்பிகள் வர்த்தகர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ds office

கடந்த காலங்களைவிட தற்போது காத்தான்குடி பிரதேச செயலகம் பொதுமக்களின் நன்மை கருதி தங்கள் விடயங்களை மிக விரைவாக முடித்துக்கொள்வதற்கு உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்தியுள்ளதாக இந்நிகழ்வில் கருத்துக்கள் தெரிவிக்கபட்டதுடன் கிழக்கிலங்கையிலேயே மிகவும் சிறப்பான சேவையினை முன்கொண்டு செல்லும் ஒரு செயலகமாக மாற்ற எண்ணியுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் இதன்போது தெரிவித்தார். அத்துடன் எமது செயலகம் நான்காம் இடத்தினை பெற்றுக்கொள்ள பலவழிகளிலும் உதவிபுரிந்த அனைத்து நலன் விரும்பிகள் தனவந்தர்கள் உத்தியோகத்தர்கள் சமூக சேவை அமைப்புக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

ds office1

Published by

Leave a comment