பள்ளிவாசல்களில் ஜேர்மன் மொழியை பயன்படுத்த கோரிக்கை
பேர்லின்: ஜேர்மனியிலுள்ள பள்ளிவாசல்கள் ஜேர்மன் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என மூத்த அரசியல்வாதி ஒருவர் கோரியுள்ளார்.அதேபோல் பள்ளிவாசல்களுக்கு துருக்கி மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் நிதியும் நிறுத்தப்பட வேண்டும் என கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் கட்சியின் பொதுச் செயலர் ஆண்ட்ரேயாஸ் ஷோயா(ர்) கூறியுள்ளார்.
அரசியல்மயமாக்கப்பட்ட இஸ்லாம் ஒருங்கிணைவதை குலைக்கிறது, தனக்கு பொருந்தக்கூடிய வகையிலான இஸ்லாத்தை ஐரோப்பா வடிவமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.ஜேர்மனியப் பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள் ஜேர்மனியில் பயிற்சி பெறவேண்டுமே அன்றி, வெளிநாடுகளில் அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment