மூஸா கண்ட சாமிரியும், முஸ்லிம் காங்கிரஸ் கண்ட ஹக்கீமும்

hakeemமூஸாவின் அல்லாஹ்வைக் காண வேண்டும் என்பதற்காக பிர்அவ்ன் தன்னைத் தானே கடவுளாக்கிக் கொண்ட எகிப்தில் பிரமிட்டுக்களைக் கட்டினான்.
இறை கட்டளைப்படி அந்த அற்பன் மூஸாவைப் பின் தொடர கடலில் மூழ்கடிக்கப்பட்டான்.அல்ஹம்துலில்லாஹ் ஆணவம் அழிந்தது.

எல்லாவற்றையும் இனிதே முடித்த நபி மூஸா இறைவனின் தரிசனத்தைக் காண தூர்சினா மலையடிவாரத்தைச் சென்றடைந்தார்.

அசரீயாக ஒரு குரல், மூஸாவே என்ன அவசரம்|
என் இறைவனைக் காண வேண்டும் என்ற ஆவல்’ என்றார் மூஸா.

நீர் இங்கே வந்து விட்டாய் உன் சமூகத்தார் காளைக் கன்று ஒன்றை இதுதான் மூஸாவின் கடவுள் என வழிபடுகின்றனரே என்று இறைவன் கூற நபி மூஸா கடுங்கோபத்துடன் மீண்டும் திரும்பி வருகின்றார்.

அவரின் தம்பி நபி ஹாறூனின் தலையைப் பிடித்து இழுத்து நடந்தது என்ன என்று கேட்கின்றார்.

என் தாயின் மகனே! என் மீது கோபம் கொள்ளாதே, நான் எவ்வளவோ சொல்லியும் சாமிரிதான் இந்த காரியத்தைச் செய்தான் என்றார்.

மூஸா சாமிரியைத் தேடிச் சென்றார். சாமிரியே உன் காரியம் என்ன என்று கேட்டார்.

நீங்கள் போனதன் பின் பிர்அவ்னின் பொக்கிஷங்கள், ஆபரணங்கள் சிலதை எடுத்து மூட்டப்பட்ட தீயில் தூதரின் காலடி மண்ணையும் எடுத்து வீச வேண்டும் என்று என் நப்ஸி’ கேட்டது. அவ்வாறு செய்தேன்.

நான் செய்த மாத்திரத்தில் அது காளைக் கன்றின் ஒலியைத் தந்தது. அப்போது நினைத்தேன் மூஸா தேடிச் செல்லும் கடவுள் இங்கே தான் இருக்கின்றார் என்று இது ஒரு வரலாறு.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் புரட்சியைச் செய்த என் தலைவன் 2000ஆம் ஆண்டில் இறையடி எய்து விட்டார்.

எங்கள் கட்சியின் பிரதிநிதிகள் கூடுகிறார்கள். புதிய தலைமையைத் தெரிவு செய்வதற்காக.

வத்திக் கானில் புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டால் வெள்ளைப் புகை வரும். தெரிவு முடியவில்லை என்றால் புகையில் மாற்றம் வரும்.

தாருஸ்ஸலாத்திலிருந்து புகை வரவில்லை துப்பாக்கி வேட்டுக்கள் வெளியேறியன. இதற்கு நான் கண் கண்ட ஒரு சாட்சி.
சகோதரர் ஹக்கீமுக்கு சாமிரியின் விபரீத ஆசை வந்தது. வாதப் பிரதிவாதங்கள் போய்க் கொண்டிருந்தன.

இடையே ஒரு குரல் –
சபையோரே தலைமைத்துவத்தை எனக்குத் தாருங்கள்! என்ன இது, என்றனர் பிரதானிகள்.

இல்லை இல்லை என் நப்ஸி கேட்கின்றது என்றார் ஹக்கீம்..

குர்ஆன் ஹதீஸை யாப்பாகக் கொண்ட எங்களுடைய கட்சி ஒரு சாமிரியிடம் அகப்பட்டு விட்டதே.

இறைவா !

எங்களை நல்வழிப்படுத்திய தலைவர் மறைய நவயுக சாமிரியை அப்பாவிகள் நம்பி விட்டனர்.

பழிவாங்கும் தலைவனிடமிருந்து எங்கள் சமூகத்தைக் காப்பாற்றி விடு.
சாமிரியால் ஒரு சமூகம் நாசமாகிக் கொண்டிருக்கின்றது.

மூஸாவின் சமூகத்தை சாமிரி வழி கெடுத்தான்.மு.கா தொண்டர்களை தலைவர் ஹக்கீம் வழி கெடுக்கின்றார்.

கலா பூஷணம் கலை இலக்கிய வித்தகர் – மீரா.எஸ்.இஸ்ஸடீன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s