லண்டன்: கேட்டி சூறாவளியின் காரணமாக இங்கிலாந்திலும் வேல்ஸிலும் 105 மைல் வேகத்தில் காற்று வீசியதால் பல விமான நிலையங்களில் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. முக்கியமான பாலங்கள் மூடப்பட்டன.லண்டன் கட்விக் விமான நிலையத்திற்கு வர வேண்டிய 20 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன.
ஹீத்ரூ விமான நிலையத்தில் 60 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. சுமார் 5,000 இல்லங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. 23 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று மிகப் பெரிய பாலங்கள் மூடப்பட்டுள்ளன.
இங்காலந்தின் தென் பகுதியில்தான் கேட்டி சூறவாளி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றாலும் ஈஸ்ட் ஆங்லியாவின் சில பகுதிகளிலும் 60 முதல் 70 மைல் வேகத்தில் காற்று வீசிவருகிறது. திங்கட்கிழமை மதியத்திற்குப் பிறகு நிலைமை மேம்படும் என என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment