லாகூர்: பாகிஸ்தானில், லாகூர் நகரிலுள்ள பூங்கா ஒன்றில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறார்கள்.சிறார்கள் விளையாடிக்கொண்டிருந்த பூங்காவிற்கு அருகில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்தப் பூங்காவில் பல குடும்பங்கள் ஈஸ்டர் ஞாயிறு நிகழ்வுகளை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.இந்தத் தாக்குதலில் காயமடைந்த சிறார்கள், பெரியோர்கள் என பலர் மருத்துமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்பது தொடர்பில் இன்னும் தகவல் வெளியாகவில்லை.

Leave a comment