கொழும்பு: தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைபாட்டின் காரணமாக தன்னால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியாது என்று லசித் மாலிங்க, தங்களுக்கு அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் நடந்துவரும் டி – 20 போட்டிகளில் அவரால் விளையாட இயலாமல் போனதையடுத்து, அவரை மீள இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
தன்னால் விளையாட முடியாது என்பதை லசித் மாலிங்கவே தமது முகாமைத்துவத்திற்கு நேரடியாக அறிவித்துள்ளார் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். தனக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக விளையாட முடியாது என தான் ஏற்கனவே அறிவித்தபோதிலும், அதனை கருத்திற்கொள்ளாமல் தன்னை விளையாட்டுக்கு தெரிவு செய்தனர் என லசித் மாலிங்க குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால் லசித் மாலிங்கவின் இந்த கருத்து உண்மைக்கு புறம்பானது எனவும், அவர் தலைமைத்துவத்திலிருந்து விலகுவதாகவே தமக்கு அறிவித்தார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் கூறியுள்ளார். லசித் மாலிங்கவுக்கு பதிலாக யாரை தெரிவுசெய்வது என்பது தொடர்பில் கொழும்பில் நடைபெறவுள்ள பயிற்சி போட்டியின் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சபையின் தலைவர் மொஹான் டி சில்வா கூறியுள்ளார்..
![Lasith-Malinga[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/lasith-malinga1.jpg?w=300&h=359)
Leave a comment