நாக்பூர்: இந்தியாவில் நடைபெற்று வரும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது.நாக்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி தமது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ஓட்டங்களை எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18.1 ஓவர்களில் 79 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக அண்டர்சன் 34 ஓட்டங்களை எடுத்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக 30 ஓட்டங்களை அணியின் தலைவர் தோனி அடித்தார்.
இந்தியாவே உலகக் கிண்ணத்தை வெல்லும் என்ற கனவோடு முதல் போட்டியைக் காணவந்த இந்திய இரசிகர்கள் இந்தியாவின் படுதோல்வியைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Leave a comment