- முஹம்மது நியாஸ்
“மஜீத் ரப்பானியின் முதல் மனைவி திட்டமிட்டுக் கொல்லப்பட்டிருப்பாரா?”
“மக்கள் மத்தியில் பேசப்படும் சந்தேகங்களில் உண்மைகள் இல்லாமலிருக்குமா??”
மனைவி மரணித்துவிட்டால் ஒரு கணவன் மறுமணம் செய்வதற்கு, எண்ணப்பட்ட சில நாட்கள் காத்திருக்க வேண்டுமென்று சில பிரதேச வழக்காறுகள் வாதிடுகின்றன.
தூய இஸ்லாத்தை புறந்தள்ளிவிட்டு முன்னோர்களின் சம்பிரதாய வழக்காறுகளையே தனது மார்க்கமாகப் பேணி நடக்கின்ற மஜீத் ரப்பானி தன்னுடைய முதல் மனைவி மரணித்த நாற்பதாவது நாளன்றே தற்போதைய மனைவியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார்.
மாத்திரமல்லாது நாற்பத்தி நான்கு வயதையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மஜீத் ரப்பானி, பத்தொன்பது வயதையுடைய திருமணமாகாத இளம்பெண்ணையே தனது முதலாவது மனைவி மரணித்துவிட்ட வெறும் நாற்பதாம் நாளில் அவசரமாக மறுமணம் செய்து கொண்டார்.
இதன் பின்னணி என்ன?
இந்த இடத்தில், “இரண்டாவது கன்னிப் பெண்ணான மனைவியுடன் வாழ ஆசைப்பட்ட மஜீத் ரப்பானியே ஏன் முதலாவது மனைவியைத் திட்டமிட்டுக் கொலை செய்திருக்கக்கூடாது?”
என்ற சந்தேகம் எழுவது இயற்கையானது.
தன் முதல் மனைவிமீதான வெறுப்பின் காரணமாகத்தான் அவள் பெற்றெடுத்த குழந்தையை தன்னுடைய இரண்டாவது இளம் மனைவி கொடூரமாகச் சூடுவைத்துத் துன்புறுத்திய நேரங்களில் அதை மஜீத் ரப்பானி கண்டு கொள்ளாமல் இருந்தாரா?
தன்னுடைய மாஜி மனைவி மீது தனக்கிருந்த வெறுப்பையும் குரோதத்தையும் அம்மனைவியால் கிடைத்த குழந்தையைச் சித்திரவதை செய்து தீர்த்துக் கொள்ளவும், முதல் மனைவியின் தகப்பனார் வெலிமட ‘ஜெமீலா’ஸ்’ உரிமையாளர் மர்ஹும் இஸ்மாயில் ஹாஜியார் வழங்கியிருந்த வீடு மற்றும் சீதனச் சொத்துக்களையும் அபகரித்துக் கொள்ளவும் முற்பட்டாரா?
தான் பெற்று வளர்த்த குழந்தையை நேற்று வந்த இளம் இரண்டாந்தாரம் மூன்று வருடங்களாக இவ்வாறு கொடுமைப்படுத்தியபோதும் அதனைக் கண்டுகொள்ளாத மஜீத் ரப்பானி, அந்த இரண்டாவது இளம் மனைவியை அடைவதற்காக தன்னுடை மாஜி மனைவியை ஏதோவொரு வழியில் “தீர்த்துக்கட்டியிருக்க மாட்டார்” என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது?
குழந்தையின் உடலில் சூடுபட்ட தழும்புகளைக்கூட ‘அலர்ஜிக்’ என்று கூறி தனது இரண்டாம் தாரத்தை அடைகாக்க முயற்சித்த மஜீத் ரப்பானி அந்த இரண்டாந்தாரத்தை அடைவதற்காக ஏன் முதலாவது மனைவியை கொலை செய்திருக்க முடியாது?
ஒரு அழகான பெண் குழந்தையை, ஈவிரக்கமென்பது இம்மியளவும் இல்லாமல் மூன்று வருடங்களாக நெருப்பால் சூடிட்ட ஒரு கொடூர ராட்சசி, இந்த ரப்பானிக்கு மனைவியாகுவதற்காக அவரோடிணைந்து அக்குழந்தையின் தாயைக் கொன்றிருக்க மாட்டாளா?
இதை நான் வெறும் ஊகத்தில் வெளிப்படுத்தவில்லை. மாறாக தனக்குப் பிடிக்காதவர்களை அடியாட்களை வைத்துப் “போட்டுத்தள்ளும்” கொடூரகுணமும், அரக்கத்தனமும் அத்வைதக்கும்பலின் உடன்பிறந்த பண்புகளாகும்.
இதற்கு முன்னரும் இவர்களோடு கூடவே இருந்து கொள்கை வளர்த்த அத்வைதப் பிரச்சாரகர் மௌலவி MSM. பாறூக் (காதிரி) அவர்களையும், அப்துர் றஊப் மௌலவிதான் தன்னுடைய அடியாட்களை வைத்துப் படுகொலை செய்தார் என்ற வலுவான சந்தேகம் அப்போதே பரவலாக நிலவியதையும் இந்த நியாயமான சந்தேகத்துடன் நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.
மேலும் பாறூக் மௌலவியின் கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட மோட்டார் சைக்கிளும், அப்துர் றஊப் மௌலவியுடைய தீவிர ஆதரவாளர் ஒருவருக்குச் சொந்தமானதென்று பின்னாட்களில் விசாரணைகளில் இருந்தும் தெரிய வந்ததையும் நாம் மறக்க முடியாது.
மட்டுமல்லாது தன்னோடு 25 ஆண்டுகளுக்கும் மேலாக கூடவே இருந்து அத்வைதப் பிரச்சாத்தின் அச்சாணியாக செயற்பட்டுவந்தவரும், பகிரங்க ஜும்ஆவின் பின்னரான பிரச்சாரத்தின்போது ‘தனது வலது கரம்’ என வாழ்த்தப்பட்டவருமான புவி MI. றஹ்மதுழ்ழாஹ் என்னும் பத்திரிகையாளருடன் ஏற்பட்ட உரசலொன்றின் காரணமாக அப்பத்திரிகையாளருடைய மனைவியை பலவந்தமாக தனது ஞான அறைக்கு வருமாறு பணித்து, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவருடைய பெயரிலிருந்த மூன்று காணிகளையும், அதில் அமைந்திருந்த இரண்டு வீடுகளையும் பலவந்தமாக சம்மேளனத்தின் பிரதித் தலைவரும், பிரசித்த நொத்தாரிசுமான சட்டத்தரணி அல்ஹாஜ். AL. அப்துல் ஜவாத் அவர்களைக் கொண்டு தனது பெயருக்கு உறுதி எழுதி வாங்கிய ஒரு ‘பாதாள உலக தாதா’வாகவும் இந்த அப்துர் றஊப் மௌலவி இருந்துள்ளது எமது மண்ணின் மறைக்க முடியாத வரலாறாகும்.
தன்னோடு ஒன்றாக உண்டு, உறங்கி, இராப்பகலாக கஞ்சாப் போதையில் திளைத்திருக்கச் செய்து ஞானப்பால் குடித்து சகவாசம் செய்தவர்களையே தருணம் பார்த்துப் “போட்டுத்தள்ள”க்கூடிய, பழிதீர்க்கக்கூடிய நிழலுலகச் செயற்பாடுகள் அத்தனைக்கும் காத்தான்குடி வரலாற்றில் ஒட்டுமொத்த குத்தகைதாரராக இருந்து வரும் இந்த அத்வைத சாம்ராஜியவாதிகளே.
அந்த கொடுங்கோல் சாம்ராஜ்ஜியத்தில் இளவயதிலேயே இணைந்து அங்கேயே ஓதி உலமாப்பட்டம் பெற்று இளம் மந்திரியாகச் செயற்பட்டு வந்த இந்த மஜீத் ரப்பானியும், இரண்டு பிள்ளைகள் பெற்றவளோடு இன்னமும் ஒன்றாக வாழப்பிடிக்காத வெறுப்பில் தன்னுடைய முதல் மனைவியைத் திட்டமிட்டுக்கொலை செய்திருக்கலாம் என்றொரு நியாயமான, வலுவான சந்தேகம் பலருக்கும் சாதாரணமாகவே எழுவது இயற்கையானது.
இச்சந்தேகம், அன்று பலருக்கும் உடனடியாகவே எழுந்திருக்காவிட்டாலும், இன்று தன் பிள்ளைக்கே தனது இளம் கட்டில் நாயகி கரண்டியை நெருப்பில் காய்ச்சிச் சூடு வைத்ததை அறிந்த பின்னரும் வாய் திறவா ஊமையாகி ‘அலர்ஜிக்’ கதையளந்த பின்னரும் எவருக்குத்தான் எழாமலிருக்க முடியும்?
கடந்து சென்ற மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின்போது எத்தனையோ திட்டமிட்ட படுகொலைச் சம்பவங்கள் தற்செயல் விபத்துக்களாக, பாரிய நோய்களாக மூடிமறைக்கப்பட்டுள்ளன.
தலைநகரில் இடம்பெற்ற வசீம் தாஜுதீனுடைய அப்பட்டமான படுகொலைச் சம்பவம் கூட ஒரு விபத்தாக ஜோடிக்கப்பட்டு அக்காலையில் குழிதோண்டிப் புதைக்கபட்டது.
அந்த வகையில் அதே மஹிந்த ஆட்சியில் பங்குதாரர்களாகப் பரிணமித்திருந்த அத்வைத சாம்ராஜ்யத்தின் துடிப்புமிக்க இளம் மந்திரியாகிய இந்த மஜீத் ரப்பானியும் தன்னுடைய முதலாவது மனைவியுடனான வாழ்வில் அலுப்புத்தட்டி, அதற்காகத் திட்டம் தீட்டி அவரைக் கொலை செய்து மண்ணறைக்கு அனுப்பி விட்டு தம்பக்கமிருந்த அரசியல், பொருளாதாரச் செல்வாக்குகளைப் பயன்படுத்தி அந்த அப்பாவி மனைவியின் மரணத்தை ஒரு நோயாக ஏன் ஊருக்குச் சித்தரித்திருக்க முடியாது? இவ்வாறான சந்தேகத்திற்கு அதிகமான – நியாயமான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
எனவே மஜீத் ரப்பானியுடைய முதல் மனைவியின் மரணம் தொடர்பில் இப்போது பலரிடமும் பரவலாகவே எழுந்திருக்கின்ற இச்சந்தேகமானது காவல்துறையினரால், புலனாயவுத்துறையினரால் தீர ஆராயப்பட்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டும். தற்போது சிறுவர் துஷ்பிரயோக துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மஜீத் ரப்பானியையும், அவருடைய இரண்டாவது மனைவியையும் முதல் மனைவியின் திடீர் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணைக்குட்படுத்த வேண்டும்.
முதல் மனைவியின் கொலை தொடர்பில் இரண்டாம் மனைவிக்குத் தொடர்பிருந்த காரணத்தினால்தான், தன் சொந்த மகளுக்கு அவள் சூடு வைத்ததை அறிந்து மஜீத் ரப்பானியால் அவளைக் கண்டிக்கவோ, இக்கொடுமையைத் தடுத்து நிறுத்தவோ முடியாது போனது என அக்கம் பக்க உறவுக்காரர்களாலும், முதல் தாரத்துக் குடும்ப உறவுகளாலும் ஆங்காங்கே ஐயம் தெரிவிக்கப்பட்டு வருவதை தட்டிக்கழித்து விட முடியாது. சற்றேனும் கிண்டிப் பார்த்து – மோப்பம் பிடித்துப் பார்த்தே ஆக வேண்டும்.
காதலுக்கும், காமத்திற்கும் கண் இல்லை என்பார்கள். எத்தனை உயர்ந்த ஞானம் படித்தவராயினும் இவற்றுக்காக இறை அச்சத்தையும், மானுட நேயத்தையும் தூக்கிக் கடாசிவிட்டு காரியம் சாதிப்பவர்களே இன்று அதிகம்.
பெற்ற அன்னையையும், வளர்த்த தந்தையையும் தன் கள்ளக் காதலனைக் கொண்டே அயர்ந்த தூக்கத்தில் வெட்டிச் சரித்த கொடூர மாணவியின் காம வரலாறை நாம் செங்கலடியில் சந்திக்கவில்லையா?
பாடசாலை சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவியை கூட்டுக்கும்பலாகக் கடத்தி காமத்தைக் கழித்த வடபுலக் கயவர்களின் வரலாறை நாம் காணவில்லையா?
மழைக்கு ஒதுங்கிய சின்னஞ்சிறுமி சீமாவைச் சீரழித்து ஒழித்த கயவனின் சரிதையை நாம் கண்கூடாகப் பார்க்கவில்லையா?
ஆகவே பாமர மக்களிடத்தில் தமக்கிருக்கின்ற மதிப்பையும், மரியாதையையும் பயன்படுத்தி சட்டத்தை தந்திரமாக ஏமாற்றி அடுத்தவர் வாழ்க்கையில், அவர்களின் உரிமைகளில் அநியாயமாக விளையாடுகின்ற பெருச்சாளிகள் யாராக இருப்பினும் அவர்களுக்கெல்லாம் இது ஒரு பாடமாக அமையப் பெறுவது அவசியமாகும்.
Leave a comment